April 2, 2015

ஸ்கூடியில் ஹெல்மட் இல்லாது சென்ற இளம் யுவதிகள் - துரத்தியது பொலிஸ்!

கோப்பாய் - கைதடி வீதியில் கோப்பாயில் இருந்து கைதடிப் பக்கமாக மூன்று யுவதிகள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் ஸ்கூட்டியில் சென்றவரைத் தவரி ஏனைய இருவரும் ஹெல்மட் அணியவில்லை. இவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் கோப்பாய்
பக்கம் சென்று கொண்டிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இவர்கள் ஹெல்மட் இல்லாது செல்வதைக் கண்டவுடன் கையைக் காட்டி மறித்துள்ளார்.

இவர் மறித்ததையும் பொருட்பாடுத்தாது ஸ்கூட்டியின் வேகத்தை அதிகரித்தவாறு யுவதிகள் ஓடத்தொடங்கினர். இவர்களது இந்தச் செயற்பாட்டைப் வழிப்போக்கர்கள் சிரித்த போது பொலிஸ்காரருக்கு ரோசம் ஏறிவிட்டது. உடனடியாக மோட்டார் சைக்கிளைத் திருப்பி ஸ்கூட்டியில் சென்ற பெண்களைத் துரத்தத் தொடங்கினார்.  

குறித்த யுவதிகளை கைதடி வைரவர் கோவிலுக்கு அருகே பொலிஸ்காரர் மறித்துவிட்டார். இவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் வழிப்போக்கர்களாக  சென்றவர்களும் இவர்களது விளையாட்டைப் பார்த்துக் கொண்டு அங்கே நின்றனர்.

ஸ்கூட்டியில் சென்ற யுவதி பொலிசாருடன் ஆங்கிலத்தில் வாதாட தொடங்கினாள். ’நீ போக்குவரத்துப் பொலிசா?’ என கேட்ட போது அந்தப் பொலிஸ்காரர் ஸ்கூட்டியின் திறப்பை பறித்துக் கொண்டு போக்குவரத்துப் பொலிசாருக்கு அறிவித்துள்ளார். அத்துடன் அங்கு வேடிக்கை பார்த்தவர்களையும் துரத்த முற்பட்டதாகத் தெரியவருகின்றது. இவர் தகவல் தெரிவித்த பின்னர் சிறிது நேரத்தில் அங்கு விரைந்து வந்த போக்குவரத்துப் பொலிசார் யுவதிகளை கைது செய்ய முயன்றுள்ளனர். இதன் பின்னர் அங்கு சிறிது பதற்றம் ஏற்படவே அவர்களின் ஆவணங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு பொலிஸ் நிலையம் வருமாறு கூறிவிட்டுச் சென்றார்கள். 

வழக்கமாக காவாலி இளைஞர்கள் செய்யும் திருவிளையாடல்களை தற்போது யுவதிகளும் செய்யத் தொடங்கி விட்டதாக அங்கு நின்ற பொதுமக்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment