மகிந்த புலிகளை அடித்து கொன்றே நீங்கள் தப்பி வந்தீர்கள், இல்லையெனில் இப்போது அடிவாங்கி சாவீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேதாசவுடனான களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பாடலொன்றை பாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சஜித்தும், பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்தவும் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரை கேலியாக சித்தரித்து வித விதமான முறையில் பாடல்களை பாடியுள்ளனர்.
பொது மக்கள் மத்தியில் இருவருக்கும் இடையில் ஒத்துவராதது போல் நடித்து நாடகமாடும் நம்நாட்டு அரசியல்வாதிகள் இவ்வாறான களியாட்ட விடுதிகளில் எவ்வாறு ஒன்றிணைந்து முன்னாள் தலைவர்களை கேலி செய்கிறார்கள்.
நம் சமூகத்தில் வாழும் பாமர மக்கள் இவர்களின் போலி நாடகங்களை நம்பி சமூகத்திற்குள் கட்சி பிரிவினைவாதங்களை வளர்த்து கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர்.
அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கும் நம் மக்கள் மாத்திரமே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ஆனால் அரசியல்வாதிகளோ மக்களின் ஆதரவை துச்சமாக கருதி அவர்கள் என்றும் போல் நட்புடனே பழகி வருகின்றனர்.கோத்தா என்னுடைய மாடு உமது வெள்ளைக்கார ராணி இன்று வைத்தியசாலையில், மாடு எனது இறைச்சிக்கான மாடு உமது வெள்ளைக்கார ராணி வைத்தியசாலையில், என தனது கேலி பாடலை மகிந்தானந்த ஆரம்பிக்க,
மகிந்த என்னுயிர் மகிந்த உங்கள் நினைவில் வரும் வைத்தியசாலை, மகிந்த என்னுயிர் மகிந்த நீங்கள் முன்னரெல்லாம் சந்திரிக்காவின், என அமைச்சர் சஜீத் தொடர்ந்தார்.
சஜித்தை பின்தொடர்ந்த மகிந்தானந்தவின் கேலி பாடலில் நீங்கள் எங்களை விற்கிறீர்கள், என மகிந்தவை கேலி செய்கிறார்.
கடந்த காலங்களில் மகிந்தவின் அரசாங்கத்தில் அவருடன் இணைந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை செய்த அரசியல்வாதிகள் இன்று அவரை கேலி செய்து பாடும் பாடல்கள் அவர்களின் ஊழல்களை திறைமறைவிற்குள் கொண்டு செல்வதற்கு இவ் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவது போலுள்ளது.
மேலும் இவ்வாறான நீருக்குள் நெருப்பு கொண்டு செல்லும், நம் மத்தியில் வாழும் அரசியல்வாதிகளை நாம் வேருடன் பிடுங்கி களையெடுத்து, எதிர்வரும் பொது தேர்தலில் சிறந்த தலைமைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.



No comments:
Post a Comment