March 15, 2015

வடமராட்சி கிழக்கில் அடையாளம் தெரியாத சடலம்!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கோடிக் கடற்கரையில் ஆணொருவரின் சடலம், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரையொதுங்கியுள்ளது. தலை மற்றும் கால் ஒன்று அற்ற நிலையில் கரையொதுங்கிய குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

வடமராட்சி பகுதியில் மீனவர்கள் எவரும் காணாமற்போகாத நிலையில் இது இந்திய மீனவரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment