வல்லைவெளிப் பகுதியில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பருத்தித்துறையிலிருந்து வந்த ஓட்டோ முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்த சென்ற மினிபஸ்ஸுடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.
முருகையா ஜெனார்த்தனன் (வயது 25) சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், ரவிச்சந்திரன் அஜந்தன் (வயது 14) என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பஸ் சாரதியைக் கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.



No comments:
Post a Comment