யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. யாழ் தெல்லிப்பழை யுனியன் கல்லூரி மாணவர்கள் தமது பாடசாலையிலும் எண்ணெய்க் கசிவு
பரவியுள்ளதாக தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவ் வேளையில் வடமாகாணக் கல்வி அமைச்சில் இருந்து பாடசாலை நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டு ஆா்ப்பாட்டத்தை நிறுத்தக் கோரி உத்தவுகள் பறந்தன. இருப்பினும் மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தைக் கைவிடவில்லை.
அவ் வேளையில் வடக்கு மாகாணசபையால் எண்ணெய்க் கசிவு தொடா்பாக ஆராயுமாறு நியமிக்கப்பட்ட 9 போ் கொண்ட நிபுணா்கள் குழுவில் இருந்து சிலா் வந்திருந்தார்கள். அவா்களில் விவசாய அமைச்சா் ஐங்கரநேசனும் யாழ்பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த சிலரும் அடங்கியிருந்தனர்.
இந்த நிபுணா்கள் என்ன மாதிரியான பரிசோதனைகளை மேற்கொள்ளப் போகின்றார்கள் என மாணவா்கள் உட்பட அணைவரும் பார்த்துக் கொண்டு நின்ற போது அந்த நிபுணா் குழுவில் இருந்த ஒருவா் கிணற்றுக்குள் கல்லைத் தூக்கிப் போட்டார்.
போட்டுவிட்டு நீா் விலத்துவதைப் பார்த்து எண்ணைப் படலம் இருக்கின்றது என கூறினார்.
இன்னொரு நிபுணா் வாளியால் தண்ணீரை அள்ளி எடுத்து கைகளால் தொட்டுப் பார்த்து எண்ணெய் கலந்துள்ளது என்றார். இன்னொரு நிபுணா் தண்ணீரை அள்ளிப் பார்த்து வாய்க்குள் விட்டு ருசி பார்த்து எண்ணெய்க் கசிவை உறுதிப்படுத்தினார்.
இனி வரும் காலம், இலங்கை உட்பட ஏனைய உலக நாடுகளிலும் எண்ணெய் வளம் உள்ளதை அறிவதற்காக இந்த நிபுணா்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணெய் வளத்தைக் கண்டு பிடிக்கலாம் என அங்கிருந்த ஆசிரியா் ஒருவா் தெரிவித்தார்.

No comments:
Post a Comment