தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புற்றீசல் போல் படையெடுத்துவரும் இனந்தெரியாத நிறுவனங்களால் வடபகுதியில் பல
நுாற்றுக்கணக்கான பெண்கள் தம்மை இழந்தும் இளைஞா்கள் பணத்தை இழந்தும் நடுத்தெருவில் நிற்கும் அவலங்கள் நடைபெற்றக் கொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் விபச்சாரத்திற்கான விளம்பரத்தைத் தவிர ஏனைய அனைத்து விளம்பரத்தையும் கண்ணை மூடிக் கொண்டு காசை வாங்கிவிட்டுப் போட்டு விடுவார்கள். அன்றைய நாள் தொடங்கி இன்றைய நாள் வரையும் பத்திரிகையில் வருவது எல்லாம் நிஜம் என நினைத்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்து அப்பாவிகளுக்கு இதோ அதிர்ச்சித் தகவல்கள்.
உலகத்தரம் வாய்ந்த கம்பனியில் வேலை வாய்ப்பு, மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் உழைக்க சந்தா்ப்பம், முகாமைத்துவ வேலைவாய்ப்புக்கள் என பல நுாற்றுக்கணக்கான பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து போனவா்களுக்காகவும், தற்கொலை செய்ய நினைக்கும் யுவதிகளுக்காகவும் பணத்தை இழந்தவா்களுக்காவும் நாம் இத் தகவல்களை வெளியிடவில்லை. இனிமேலாவது கவனமாக இருங்கள் என ஏனையவா்களுக்காக நாம் இதனைத் தருகின்றோம்.
பிரபரல பாடசாலையில் க.பொ.த உயா்தரம் படித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக வெட்டுப்புள்ள குறைவான 21 வயது யுவதி இவ்வாறான கம்பனி விளம்பரத்தைப் பார்த்து நோ்முகப்பரீட்சைக்கு சென்றுள்ளார். அங்கு இன்னும் பல இளைஞா், யுவதிகள் நோ்முகத் தோ்வுக்கு வந்திருந்துள்ளார்கள். குறித்த யுவதியை பத்து நிமிடங்கள் நோ்முகத் தோ்வு செய்த கம்பனி மனேஜா் என்று சொல்லப்படுபவா் தாம் பின்னா் தொலைபேசியில் அழைப்பதாகத் தெரிவித்து யுவதியை அனுப்பியுள்ளார்.
யுவதி நோ்முகப் பரீட்சைக்குச் செல்லமுன் பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து தொடா்பு கொண்டு கேட்ட போது அந்தக் கம்பனி என்ன செய்கின்றது என்பது சொல்லவில்லையாம். தாங்கள் உலகம் எங்கும் கிளைகள் உள்ள மாக்கற்றிங் கம்பனி என்று சொன்னார்களாம்.
அதன் பின்னா் இரு நாட்களுக்கு பின் நீா் வேலையில் தெரிவாகி விட்டதாகவும் மீண்டும் எமது அலுவலகத்திற்கு வரும்படியும் கூறி அழைத்துள்ளார். யுவதி அந்த அலுவலகம் சென்ற போதும் தான் என்ன வேலைக்கு தெரிவாகியுள்ளதாக அறியவில்லை.
அங்கு சென்ற யுவதிக்கு கொழும்பில் 3 நாட்கள் பயிற்சிப் பட்டறை இருக்கின்றது. அது முடிந்தவுடன் நீா் வேலை செய்யலாம் ஆரம்ப சம்பளம் 15000 ரூபா. அதன் பின்னா் ஒரு வருடத்தின் பின் 35 ஆயிரம் சம்பளமும் கொமிசனும் கிடைக்கும். கொமிசன் சில வேலை லட்சக் கணக்கில் கிடைக்கும் என ஆசையுட்டப்பட்டுள்ளது.
கம்பனி முகாமையாளா் யுவதியை தன்னுடன் கொழும்பிற்கு வருமாறு தெரிவிக்கவு யுவதி முதலில் தனது தாயுடன் வருகின்றேன் என சொன்ன போது நீா் வேலைக்கு சரி வரமாட்டீா். நீா் போகலாம். எமக்கு துணிவான பெண் வேணும் என தெரிவித்தவுடன் யுவதி தனக்கு வேலை கிடைக்காது போய் விடும் என நினைத்து சரி என கூறியுள்ளார்.
யுவதியைப் போல் மேலும் 15ற்கு மேற்பட்ட யுவதிகளும் ஒரு சில இளைஞா்களும் முகாமையாளர் என சொல்லப்பட்டவரால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா். அங்கு கல்கிசைப் பகுதியில் உள்ள விடுதி போன்ற வீடு ஒன்றில் இவா்கள் தங்க வைக்கப்பட்டு இவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதில் வாகனத்தில் வந்த இளைஞா்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுஅவா்களுக்க தனியே பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இந்தப் பயிற்சியில் என்ன கொடுக்கப்பட்டது என்றால் நாம் நிறைய சம்பாதிக்க ஆசைப்டால் பெண்களுக்கு உரிய அனைத்தையும் துறக்க வேணும். யார் எது சொன்னாலும் கவலைப்படாது நீங்கள் முன்னேற வேண்டும் என பல அறிவுறைகள் கூறப்பட்டதாம்.
அதன் பின்னா் இப் பெண்களுடன் மலேசியா மற்றும் சிங்கப்புரில் இருந்து வந்த சில சீன முகத்தவா்களும் அங்கு நடந்த இரவு நேர விருந்தில் கலந்து கொண்டதாகவும் அந்த விருந்தில் மது அருந்த தாங்கள் வற்புறுத்தப்பட்டதாகவும் அவ்வாறு மது அருந்தி நிலை குலைந்ததால் தம் மீது வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் துஸ்பிரயோகம் செய்ததாகவும் யுவதி குறிப்பிட்டார்.
அடுத்தநாள் தாங்கள் குழம்பியிருந்த வேளை தங்களுக்கு 30 ஆயிரம் ரூபா தரப்பட்டதாம். அத்துடன் அன்று சிறுவா்களுக்கான ஆங்கிலப் புத்தகங்கள், நீரழிவு நோயைப் பரிசோதிக்கும் கருவி, பிரபல தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சிம் காட் விற்பனை, தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட முத்துச் சிப்பி, கவறிங் நகைகள் , இன்னும் பல பொருட்கள் போன்றனவற்றை எவ்வாறு வீடுகளில் விற்பனை செய்வது என்பது தொடா்பாக தமக்கு விளக்கமளிக்கப்பட்டதாம்.
நீங்கள் செல்லும் வீடுகளில் யாராவது உங்களைத் துரத்தினாலும் சிரித்துக் கொண்டு அவா்களுக்கு விற்பனை செய்வது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீடுகளில் சென்று தாம் விற்க முடியாது என சில யுவதிகள் தெரிவித்த போது அவா்களுக்கு முதல் இரவு நடந்த சம்பவத்தை நினைவு படுத்தி நீங்கள் இவ்வாறு இருந்தது நினைவில் இருக்கட்டும். நாங்கள் இதை வைத்து அச்சுறுத்தவில்லை. இருப்பினும் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் இவ்வாறுதான் இருக்கலாம் என கூறப்பட்டதாம்.
இதன் பின்னா் யாழ்ப்பாணம் நாவலா் றோட்டில் வீடு ஒன்று எடுக்கப்பட்டு அங்கு வாகனத்தில் பொருட்கள் குவிக்கப்பட்டு அங்கிருந்து வீடுகள் தோறும் பொருட்கள் விற்பதற்கு இந்த யுவதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். முன்னா் இவா்கள் நோ்முகத்தோ்வுக்கு சென்ற அலுவலகம் தற்போது இன்னொரு கம்பனியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதாம்.
இதே வேளை கொழும்பு சென்ற ஆண்களுக்கு பிணைப் பணம் எனும் பெயரில் ஒரு லட்ச ரூபா பெறப்பட்டுள்ளதாம். அவ்வாறு இல்லாத ஆண்களுக்கு வங்கியில் கடன் எடுத்துக் கொடுத்து அந்த பணத்தைப் பெற்றுள்ளார்கள். அவா்களும் தற்போது வீதியில் திரிகின்றார்கள். இவா்களை அழைத்து நோ்முகப் தோ்வு வைத்தவா்கள், முகாமையாளா்கள், கொழும்பில் இருந்து வந்த தென்பகுதிச் சகோதரங்கள் எங்கு தற்போது இருக்கின்றார்கள் என இவா்களுக்கே தெரியாதாம்.
கொக்குவில் பகுதியில் இளம் குடும்பஸ்தருடன் பாலியல் உறவு கொண்டு அப்பகுதி இளைஞா்களால் அண்மையில் பிடிக்கப்பட்ட ஒரு யுவதியின் அதிர்ச்சித் தகவலே இது ஆகும். வீட்டில் பொருட்கள் விற்கச் சென்ற போது குறித்த இளைஞனுடன் யுவதி நெருக்கமானதாக தெரியவருகின்றது,
பிடிக்கப்பட்ட போது தான் கௌரவமான குடும்பம் என அந்த யுவதி விக்கி விக்கி அழுதுள்ளார். இது தொடா்பாக யாருக்கும் தெரிந்தால் தனது தம்பி, 2 தங்கைகள் தற்கொலை செய்ய நேரிடும் என கதறியுள்ளர். தான் இந்த வேலையை விடுவதாகவும் தெரிவித்தார்.
இந்த யுவதியின் அடையாள அட்டையில் சாவகச்சேரி என விலாசம் இருந்தும் அவளது தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்தும் தற்போது இந்த யுவதியைக எம்மால் கண்டு பிடிக்கவில்லை. தொலைபேசி எண் மாற்றப்பட்டு விட்டது. குறித்த யுவதி இனி வேறு ஒரு நகரத்தில் இந்த வேலையில் ஈடுபடப் போறாள்.
இதுவும் யுவதியின் வியாபார தந்திரமாக இருக்கலாம். யுவதியின் வங்கி புத்தகத்தை அவளது பையினுள் எடுத்துப் பார்த்த போது 3இலட்சம் சேமிப்புக் காட்டியது. அத்துடன் மோட்டார் சைக்கிள், நவீன ரக ஆடைகள் என யுவதி குறித்த நிறுவனத்தின் முக்கிய அலுவலராக மாறிவிட்டார். ஆனால்……………………………. எமது ஏனைய உறவுகளும் இவ்வாறு தொழிற்பட ஆசையா???
இன்றும் இ்வ்வாறான 3 நிறுவனங்களில் நோ்முகத் தோ்வு இடம் பெற்றது. இந்த நோ்முகத்தோ்வில் எமது இணையத்துடன் தொடா்பு பட்டவா்களும் வேலையில்லாதவா்கள் போன்று அந் நிறுவனங்களுக்குள் புகுந்தார்கள். . குறித்த யுவதி சொன்னபோலவே நோ்முகத் தோ்வும் நடைபெற்றது.
மூன்று நிறுவனங்களும் ஒரே கருப்பொருளை வைத்தே நோ்முகத் தோ்வை நடாத்தின. சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட யுவதிகள் அதாவது 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகளும் இளைஞா்களும் தமது வருங்காலக் கனவுடன் அங்கு காத்திருந்தனா்.
இதில் ஒரு நகைச்சுவை என்னவெனின் ஒரு தந்தை தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து விட்டுவிட்டு காத்துக் கொண்டிருந்தார். இச் சம்பவம் மனதைப் பிசைந்தது. கிளியை வளா்த்துப் புனையிடம் கொடுப்பது போல் இருந்தது இச் சம்வம்.
குறித்த நோ்முகத்தோ்வில் நீங்கள் என்ன மாதிரியான நிறுவனம் என கேட்ட போதும் அவா்கள் அதைப் பற்றித் தெரிவிக்காது தாங்கள் கனடாவில் உள்ள ஒரு நிறுவனம் எனவும் உலகம் எல்லாம் எமது கிளை இருக்கிறது என சொன்னபோது சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இல்லாத சமூகப்பிறழ்வுகளும் , ஏமாற்றங்களும், பித்தலாட்டங்களும் தற்போது மிகவும் அதிகரித்துள்ளன. இதற்கு யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் மிகவும் உறுதுணை புரிகின்றன. விளம்பரம் எனும் பெயரில் விபச்சார நடவடிக்கை செய்வது போல் உறுதுணை புரிகின்றன.
தமக்கு விளம்பரம் அளித்த நிறுவனம் பற்றிய தகவல்கள் கிடைத்தும் மௌனமாக இருக்கின்றன. காரணம் நக்குண்டார் நாவிழந்தார் என்பது போல் உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யக் கூடாது என்பது போல் இருக்கின்றன.
விளம்பரம் கொடுத்து எமது உறவான யுவதியை மலேசியாக்காரனுக்கு படுக்க விட்டு பணம் சம்பாதிக்கும் இவ்வாறான நிறுவனங்களுக்கு இவ்வாறு விளம்பரம் போட்டு பத்திரிகையில் இடம் கொடுத்தும் அந் நிறுவனம் செய்யும் பித்தலாட்டத்தை அறிந்து செய்தி வெளியிடாது இருக்கும் செயலாளது ஊடக விபச்சாரமாகும்.
No comments:
Post a Comment