September 8, 2014

EPDPயின் நயவஞ்சகம்! விந்தன் பாச்சல்!1

விந்தனால் பயமாம் டக்ளசிடம் பெண் ஒப்பாரி” என்ற தலைப்புடன் தங்கள் இணையத்தளத்தில் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியின் உண்மை நிலையை விபரிக்கின்றேன்.

கடந்த 2007ம் ஆண்டு யாழ் கே.கே.எஸ் வீதியில் காணி ஒன்றை நான் கொள்முதல் செய்திருந்தேன். அக்காணியின் அளவு ஒரு பரப்பும் அத்தோடு அதற்குள் ஒரு சிறு குடிசையும் உள்ளது. குறித்த காணியை எனக்கு விற்றவர் அக்காணியின் உரிமையாளரான முத்துத்தம்பி அப்புலிங்கம் தங்கரத்தினம் என்பவரே. இக்காணியை எழுதிய சட்டத்தரணி பா.தவபாலன் (நல்லூர்). காணியை எமக்கு விற்றவர் காசை பெற்றுக்கொண்ட பின் காணியை எம்மிடம் ஒப்படைக்காமல் தொடர்ந்து ஒரு வருட காலமாக அதற்குள்ளே குடியிருந்து வந்த நிலையில் திடீரென என்னிடம் கூறினார் “வீடு ஒன்று வாடகைக்கு பார்த்துள்ளேன் வாடகை முற்பணமாக ரூபா ஒரு லட்சம் கேட்கிறார்கள் நீங்கள் தந்துதவுங்கள் மூன்று மாதத்தில் தருகின்றேன்”; என கேட்டார். இதற்கு நான் இணங்கி சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் (தொலைபேசி இலக்கம் 0212223690 – 0777746829) அவர்கள் மூலம் காசு கொடுப்பதற்கான ஒரு உடன்படிக்கையையும் செய்து பணத்தை வழங்கியும் மூன்று வருட காலமாக காணியை ஒப்படைக்காமல் அதற்குள்ளே தொடர்ந்து குடியிருந்து வந்த நிலையில் “எமக்கு காணி தேவையில்லை பணத்தையாவது தாருங்கள்” என கேட்டும் தராத நிலையில் 2010ம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஏ.ராஜரட்ணம் (தொலைபேசி இலக்கம்- 0212228110) மூலம் வழக்குத்தொடுத்து இன்றுவரை நான்கு வருடங்களாக வழக்கு நடந்து வருகின்றது. இவ்வழக்கின் எதிராளியும் எதிராளியின் சட்டத்தரணியும் வழக்கின் பல தவணைகளுக்கு வராத காரணத்தால் 05.09.2014 அன்று யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் பிசுக்கால் ஊடாக அழைப்பாணையும் அனுப்ப சொல்லியுள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க இவ்வழக்கிற்கும் காணிக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லாத சம்பந்தமில்லாத எதிராளியான அப்புலிங்கத்தின் மகளான திருமதி.சுகுமார் சத்தியராணி என்பவர் 02.09.2014 அன்று ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட அலுவலகத்திற்கு சென்று ஏகாம்பரம் ஏரம்பமூர்த்தி எனும் நபரொருவர் தங்களுக்கு பணம் தரவேண்டும் எனவும் அதை பெற்றுத்தர வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனக்கும் தாங்கள் காசு தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் இக்கடிதத்தினை பெற்ற ஈ.பி.டி.பி யின் முன்னால் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமாகிய கே.வி.குகேந்திரன்  (வி.கே.ஜெகன்) என்பவர் எனக்கு எதிராக எனது பெயருக்கு களங்கம் விளைவித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக 05.09.2014 அன்று அச்சு மற்றம் இலத்திரனியல் ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்த தகவல் ஆதாரபூர்வமாக எனது கைக்கு எட்டியபின்பு இவ்விடயம் தொடர்பாக எனது சட்டத்தரணிகளான ஏ.ராஜரட்ணம் வி.ரி.சிவலிங்கம் ஆகியோருக்கு அறிக்கைகளின் பிரதிகளையும் வழங்கியுள்ளேன். அத்தோடு இன்றைய தினம் யாழ் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பொறுப்பு அதிகாரியையும் சந்தித்து எனக்கு எதிராக ஜெகனால் ஏற்படுத்தப்பட்டுள்ள அவதூறு தொடர்பாக விபரமாகக்கூறி ஆதாரங்களை சமர்ப்பித்ததோடு ஜெகனுக்கு எதிராக இன்று முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளேன்.
நீதிமன்ற விவகாரத்தில் இவர் தேவையில்லாமல் தலையிட்ட விடயத்தை எனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்திற்கும் சொல்ல இருக்கின்றேன்.
நன்றி
கே.என்.விந்தன் கனகரத்தினம்
வடக்கு மாகாணசபை உறுப்பினர்
யாழ் மாவட்டம்

No comments:

Post a Comment