பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ச, தன்னுடைய நேரடியாக
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தன்னை அழைக்கவில்லையென வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன்
தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டட தொகுதியில் புதன்கிழமை (10) இடம்பெற்றது.
அமர்வு முடிவடைந்து வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'கோட்டபய ராஜபக்ச, உங்களை சந்திப்பதற்கு மேல் மாகாண சபை உறுப்பினரான மனோகணேசன் ஊடாக தூது விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்ததே, அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என ஊடகவியலாளர்கள் வினவினர்.
அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனோகணேசனின் தாயாருடை மரண வீட்டிற்கு வந்திருந்த கோட்டாபய, என்னுடன் கதைப்பதற்கு தான் தயாராகவிருப்பதாக மனோகணேசனிடம் தெரிவித்திருந்தார். மாறாக தூது விடவில்லை.
அத்துடன், கோட்டபய ராஜபக்சவிடம் இருந்து எவ்வித அழைப்புக்களும் எனக்கு நேரடியாக வரவில்லை. அவ்வாறு அழைப்பு வந்தால் எனது கட்சியின் தலைமையுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment