September 10, 2014

முல்லைத்தீவில் காணாமல் போன குடும்பங்களுக்கு உதவி!

மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் , SPICE திட்டத்தின் கீழ்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப மாணவர்களுக்கு
உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில்
ஏழ்மை நிலையிலுள்ள சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்வாங்கப்பட்டு தலா 5000 ரூபா பெறுமதியான கல்வி சார் உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.
மன்னார் பிரஜைகள் குழுவின் உபதலைவர் அண்டனி சகாயம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் , வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கான உதவிப்பொருட்களை வழங்கிக் கௌரவித்தார்.




No comments:

Post a Comment