அவுஸ்ரேலியா அரசாங்கம் அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்த மேற்கொள்ளும் எந்தவொரு நகர்வும் ஊழலைத் தூண்டி, பாரிய பிரசனையை ஏற்படுத்துமென அவுஸ்ரேலியா
எதிர்க்கட்சித் தலைவர் சாம் ரெயின்ஸி தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை எதிர்க்கட்சி ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டாதென எதிர்க்கட்சித் தலைவர் சாம் ரெயின்ஸி தெரிவித்தார்.
நவுரு தீவு தடுப்பு முகாமில் உள்ள இந்த அகதிகள் ஆயிரம் பேர் கம்போடியாவில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று பல செய்திகள் வெளியானதை அடுத்து எதிர் கட்சி தலைவர், அவரது கருத்து வெளியிட்டுள்ளார்
இதன் மூலமாக இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை பராமரிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த நாட்டுக்கு வழங்கும் நிதி கறைபடிந்த உத்தியோகத்தர்கள் கையில் சேரும் எனவும் அந்த நாட்டு மக்களிடத்திலும் பாரிய பிரச்சனையை தூண்டுவதர்க்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
புகலிட கோரிக்கையாளர்களுக்கு கம்போடியா நாட்டில் வாழ்வதற்க்கான போதிய வசதிகளும் அங்கு இல்லை என்பதனால் ஒரு போதும் இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடியாது அரசங்கம் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார் ..
No comments:
Post a Comment