எமது உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும், எமது தளராத உறுதியையும்
எடுத்துக் கொள்வோம்.
புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் வலிகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம் .எமது தார்மீகக் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது.ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது சுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம் .

அவ் வகையில் நடைபெற இருக்கும் ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை இனவாத அரசுக்கு பல்வேறு பக்கங்கள் ஊடாகவும் பாரிய அழுத்தங்கள் எழும்புகின்றன . இலங்கையின் வெளியுறவு தொடர்பு சொந்த நலன்களின் அடிப்படையில் தொடர்ந்தாலும், பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தமது அதிருப்திகளை மெல்ல வெளியிட ஆரம்பிக்கின்றன .
அத்தோடு எதிர்வரும் 08.09.2014 முதல் ஜெனீவாவில் ஒன்றுகூட இருக்கும் ஐநா மனிதவுரிமை சபை அமர்வுகளின் கால கட்டத்திலும் ,ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்ட நிலையிலும் எமது நீதிக்கான போராட்டத்தை வலுவோடு முன்னெடுக்க வேண்டி நிற்கின்றோம்.
எது எவ்வாறு இருப்பினும் எமது விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது .ஆதலால் நாம் எம்மை பலப்படுத்தும் வகையில் எமது தார்மீக அரசியல் போராட்டத்தை வலுப்படுத்துவோம் .
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா வை நோக்கிய நீதிக்கான ஈருறுளிப்பயணத்தின் ஊடாக ஐரோப்பிய நாடுகளின் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இன அழிப்பை எடுத்துரைத்தல்.சம நேரத்தில் செல்லும் வழிகளில் அரசியல் கட்சிகளுக்கும் முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமக்கு தொடர்ந்து நடைபெறும் இன அழிப்பை தடுத்து நிறுத்த கோருதல் . அத்தோடு எமது ஐந்து அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்து பேசுதல் .

ஐநாவை நோக்கிய நீதிக்கான ஈருறுளிப்பயணம் ஒரு வெகுயன மக்கள் போராட்டம் . அந்தவகையில் ஜெனீவா பேரணிக்கு தமிழ் மக்களை அணிதிரட்டவும் ஒரு வாய்ப்பாக அமைகின்றது .
ஐந்து அம்ச கோரிக்கைகளும் பின்வருமாறு அமைகின்றது :
1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்துஇ அனைத்துலகச் சட்டங்களை மதித்துஇ நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெல்ஜியம் , பிருஷ்செல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக இருந்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து ஐநா சபையை நோக்கி
நீதிக்கான ஈருறுளிப்பயணம் 3.09.2014 ஆண்டு மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்க இருக்கின்றது .
நீதிக்கான ஈருறுளிப்பயணம் 3.09.2014 ஆண்டு மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்க இருக்கின்றது .
மேலதிக தொடர்புகளிற்கு
No comments:
Post a Comment