கடந்த சில நாட்களுக்கு முன் ஆனைக்கோட்டைப் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில்
ஈடுபட்டவா்களை ஓமந்தைப் பொலிஸ் சோதனைச் சாவடிப் பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிசார் மடக்கியிருந்தனா்.
ஆனைக் கோட்டைப் பகுதியில் வெள்ளை வானில் வந்து வீடு புகுந்து அங்கிருந்த பெண்களைக் கட்டிப் போட்டு கொள்ளையடித்த கும்பலின் தலைவனுக்கும் சாவகச்சேரிப் பொலிசாருக்கும் இடையில் நெருங்கிய தொடா்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கைது செய்யப்பட்ட முக்கிய கொள்ளைக் குழுத்தலைவனான கச்சாயைச் சோ்ந்த புனனேஸ்வரன் ரஜீவன் என்பவன் சாவகச்சேரி பொலிசாருடன் மிகவும் நெருக்கமான தொடா்புடையவன் எனத் தெரியவருகின்றது. இவன் கறுப்பு நிற நிசான் வாகனத்தில் எந் நேரத்திலும் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திற்குள் நுளையும் அளவிற்கு அங்குள்ள பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடா்பு வைத்திருந்தவன் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
இவனுக்கு வவுனியா, மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறானவா்களுடன் பொலிசார் நட்பு கொள்வது வேலியே பயிரை மேய்வது போல் இருக்கும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனா்.
No comments:
Post a Comment