July 27, 2014

பளை வந்த ரயிலிலிருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்!!

கொழும்பிலிருந்து பளையை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து பாலமொன்றின் மீது மோதுண்டு இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றிற்கு வருகைதந்து, மீண்டும் திரும்பி வரும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment