July 27, 2014

தமிழின அடையாளத்தை நிலை நிறுத்தும் புலம்பெயர் தமிழ் இளையோர்கள்

புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்தாலும் எமது இரண்டாம் தலமுறை தமிழ் இளையோர்கள்  பல்வேறு வகையில் தமிழின  அடையாளத்தை நிலை நிறுத்துவதில்
முன்னின்று உழைப்பதை அனைத்து நாடுகளிலும் கவனிக்க கூடியதாக அமைகின்றது.
அந்தவகையில் யேர்மனியில் Dortmund நகரில் நடைபெறும் உதைப்பந்தாட்டமும் / பல்லின சமூக ஒருங்கிணைப்பும் எனும் தலைப்பில் நடைபெறும் உதைப்பந்தாட்டாச்சுற்றுப்போட்டியில் பல்வேறு சர்வதேச நாடுகளின் இளையோர்களுடன் , ஈழத்தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தி குறிப்பிட்ட நகர தமிழ் இளையோர்கள் வெற்றிகரமாக விளையாடி நாளை 27.07.2014 மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இச் சுற்றுப்போட்டியில் யேர்மனி, மரோக்கோ, கானா, கொங்கோ, குடிஸ்தான், அங்கோலா, துருக்கி, கம்பியா, கினியா நாடுகளின் இளையோர்களுடன் எமது ஈழத்தமிழ் இளையோர்கள் விளையாடி அதன் தொடர்ச்சியாக இறுதி ஆட்டத்துக்கு கினியா (Guinea) நாட்டு இளையோர்களுடன் மோத இருக்கின்றனர் .
இவ் இளையோர்களுக்கு ஆதரவு வழங்கி இறுதிப் போட்டியிலும் வெற்றிபெற வைப்பதற்கு அப் பகுதியில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் .
இச் சுற்றிப்போட்டி பல்லின சமூக ஒருங்கிணைப்பு அமைப்புகளால் ஒழுங்குசெய்யப்பட்டு நகரபிதாவும் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது .
இறுதி ஆட்டம் நடைபெறும் இடம் :
FC Merkur (Schumannstrasse)
நேரம் :மாலை 6 மணிக்கு 
காலம் : 27.07.2014

No comments:

Post a Comment