தேசிய ஒற்றுமையை குலைக்கும் வகையில் ஊடகச் செயலமர்வை நடத்தாதே என்று கூறி கொழும்பு இதழியல் கல்லூரிக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை முற்பகல் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் குழு என்று தம்மை அடையாளப் படுத்தியவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'ரைட்ஸ் நவ்' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ஊடகச் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக வடபகுதியிலிருந்து ஊடகவியலாளர்கள் கொழும்புக்குச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அத்தகைய செயலமர்வை நடத்தக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'பயங்கரவாத ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு நடத்தாதே', 'நாட்டைக் காட்டிக்கொடுத்து சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்பவர்கள் இவர்கள்தான்' போன்ற கோசங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, செயலமர்வில் கலந்துகொள்வதற்காக வடபகுதியிலிருந்து கொழும்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் நேற்றிரவு பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment