சிறீலங்காவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறீலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்
சிறீலங்காவின் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிங்களர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் முஸ்லீம் மக்களின் வீடுகள் கடைகள் சிங்களவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள சிறீலங்கா துணைத் தூதரகம் முன்பாக தவஹீத் ஜமா அத் அமைப்பினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர்.
சிறீலங்காவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் தாக்குதலில் ஈடுபட்ட பொதுபல சேனா அமைப்புக்கு தடை விதிக்கவும் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.அப்போது சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக தவ்ஹீத் ஜமா அத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment