இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாவை முன்னிறுத்தி தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த வேணும் என கோரிக்கை வைத்தது இன அழிப்புக்கு உள்ளாகி தவிக்கும் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு உரம் சேர்த்திருக்கின்றது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் இணைத்தலைவர் பேராசிரியர் சிறிரஞ்சன் அவர்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இவ்விடையமாக அனுப்பிய வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா சிறிலங்காவுக்கு எதிரான கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும்,என்பதுவும் உலகத்தமிழர் தொடர்ந்தும் நம்பிக்கையோடு போராட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது .
அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இந்திய தூதரங்களை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான மக்கள் போராட்டங்கள் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் ஒழுங்கு செய்யப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
தகவல் : அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

No comments:
Post a Comment