June 12, 2014

யாழில் மிருகபலியினை தடுத்துநிறுத்த கோரி உண்ணாவிரதபோராட்டம்!

யாழ். கீரிமலை கவுணாவத்தை ஆலயத்தில் மேற் கொள்ளப்படவுள்ள மிருகபலியினை தடுத்து நிறுத்தக் கோரி நாளை வெள்ளிக்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப்படவுள்ளது.
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலைய முன்றலில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரைக்கும் நடைபெறவுள்ள இப் போராட்டத்திற்கு அறவழிப் போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
மேற்படிப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 6 ற்கு மேற்பட்ட அமைப்புக்கள் தமது ஆதரவினை தெரிவித்தள்ளதோடு, நாளைய போராட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் அறவழி போராட்டக்குழு ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தது. மேற்படிச் சந்திப்பிலேயே போராட்டத்திற்கான அழைப்பினையும் விடுத்துள்ளது.
அறவழிப்போராட்டக்குழுநிறுவனர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் இந்த உண்ணா நோன்பு நிகழ்விற்கு தலைமை தாங்குகிறார்.

No comments:

Post a Comment