May 25, 2014

இனப் படுகொலையாளனை இந்தியாவுக்குள் அழைக்காதே: மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம்



இந்திய மோடி அரசே தமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷவை அழைக்காதே, இந்தியாவுக்குள் அனுமதிக்காதே எனக் கோரி மே பதினேழு இயக்கம் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் நடைபெற்றது.
2009 ஆம் அண்டு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ஷவை இந்திய ஒன்றியத்திற்குள் வர அழைத்திருப்பது இந்திய ஒன்றியத்தில் வாழும் தமிழர்களை அவமானப்படுத்தும் செயலாகவே இருக்கும் என மே பதினேழு இயக்கத்தின் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசும் ராஜபக்ஷவும் இனப்படுகொலையாளிகள் என 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜேர்மனியில் கூடிய நிரந்த மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இவ்வாறான சூழ்நிலையில், ராஜபக்ஷவை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்று உலகமெங்கும் வாழும் தமிழர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் செயற்பட்டு வருகின்றனர்.
இப்படியான நிலைமையில், இனப்படுகொலைக் குற்றவாளியை சிறப்பு விருந்தினராக இந்தியாவை ஆளப் போகும் பாஜக அழைத்திருப்பது இனப்படுகொலை குற்றவாளிகளை உலக அரங்கில் காப்பற்றும் செயலக அமையும். இதற்காக தான் ராஜபக்ஷவை பாஜக விரும்பி அழைக்கின்றதா என்ற சந்தேகம் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
ராஜபக்ஷ அரசு இனப்படுகொலை அரசு எனவும் இலங்கையுடன் இந்தியா எந்த நட்புறவும் வைக்கக் கூடாது என்று தமிழ் மாநில அரசு தமிழக மக்கள் சார்பில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதனை மதிக்காமல் நாட்டை ஆளப் போகும் பாஜக செயற்படுவது இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என திருமுருகன் காந்தி குற்றம்சுமத்தினார்.

No comments:

Post a Comment