ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்திய தொலைக்காட்சிக்கு செவ்வியளிக்க மறுத்த வைகோ
தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் இந்திய ஊடக ஒன்றுக்கு செவ்வி வழங்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறுத்துள்ளார்.
தமிழகத்தில் விருது நகர் பிரதேசத்தில் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் செய்தியாளர் அவரை செவ்விக் காண முயற்சித்துள்ளார்.வைகோ நேற்று விருதுநகரில் இருந்து சூரன்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
இடையில் வழிமறித்த டைம்ஸ் நவ், பத்திரிகை பெண் செய்தியாளர் வைகோவிடம் செவ்வி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.ஆனால் பேட்டியளிக்க வைகோ மறுப்பு தெரிவித்துவிட்டார். தொலைக்காட்சி உரிமையாளரே வைகோவிடம் செவ்வியெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதால் தருமாறு செய்தியாளர் கேட்டுக்கொண்டார்.
இதன் பிறகு காரில் இருந்து இறங்கிய வைகோ,
உங்கள் தொலைக்காட்சி, தமிழர்களுக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்புகிறது.
ஈழத்தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து செய்தி ஒளிபரப்புகிறது.
ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கிறது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைக்கவில்லை என்று செய்தி வெளியிடுகிறது.
பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறாது என்றும் சொல்கிறது. இப்படி தமிழினத்திற்கு துரோகம் செய்வதற்காகவே ஊடகம் நடத்தி கொண்டு இருக்கும் உங்கள் நிறுவனத்துக்கு செவ்வியளிக்க முடியாது.டைம்ஸ் நவ் ஊடகத்தின் நிறுவனர் வந்து கேட்டாலும் செவ்வியளிக்க முடியாது. உண்மையான செய்திகளை முதலில் வெளியிடுங்கள் என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment