யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசியை வசந்தி அரசரட்ணம் மீண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால்
தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.
மாணவர்கள் மத்தியில் மென்போக்கைக் கடைப்பிடிக்காத துணைவேந்தராக கணிப்பிடப்பட்டிருந்த இவர் மீண்டும் துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றமையானது யாழ்.பல்கலைக்கழகத்தை மீண்டும் இறுக்கமான சூழலுக்கு கொண்டுசெல்லும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றது. இதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகள், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி குணசீலன் 16 வாக்குகள், யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடப் பேராசிரியர் விக்னேஸ்வரன் 13 வாக்குகள் என்ற அடிப்படையில் வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
இந்த மூவரின் பெயர்களும் ஜனாதிபதிக்கு அனுப்பட்ட நிலையிலேயே அவர் மீண்டும் வசந்தி அரசரட்ணத்தை துணைவேந்தராக தெரிவுசெய்திருக்கின்றார்.
No comments:
Post a Comment