குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசியினை பொலிஸாரிடம் மேலதிக
விசாரணைக்கு ஒப்படைக்க யாழ்.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த யுவதியின் மரணம் தொடர்பான வழக்கு இன்று யாழ்.நீதிமன்றினில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகிக்கப்படுவதாக அவரது பெற்றோரினால் தெரிவிக்கப்பட்ட இரு மதகுருமாரும் இன்று மன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டிருந்தன.எனினும் அவ்வாறு நீதிமன்றினில் ஆஜராகுமாறு அழைப்பேதும் கிட்டியிருக்கவில்லையென ஆயர் இல்லத்துடன் தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் விசாரணைகளிற்காக யாழ்.நீதிமன்றினில் ஆஜரான யுவதியின் பெற்றோரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது மகளது மரணம் கொலையா தற்கொலையாவென அடையாளப்படுத்தப்பட முடியவில்லையென தந்தையார் தெரிவித்துள்ளார்.விசாரணை எதிர்வரும் மே 12ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லையெனவும் மனஉளைச்சலினாலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கலாமெனவும் சட்டவைத்திய அதிகாரி தனது அறிக்கையினில் தெரிவித்துள்ளாராம்.

No comments:
Post a Comment