வெலிக்கடை சிறைச்சாலையை இடமாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பொரளை அருகே அமைந்துள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே கொண்டு செல்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
இங்கு வெலிக்கடை, மெகசின், நியூ மெகசின், கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, மற்றும் சிறைச்சாலை மருத்துவமனை என்பனவும் சிறைச்சாலை உத்தியோகத்தர் பயிற்சிக் கல்லூரி, சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கான ஆரம்பப் பாடசாலை என்பனவும் அமைந்துள்ளன.
இவற்றுக்காக ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசம் வர்த்தக ரீதியாக பெரும் மதிப்பான காணிகளைக் கொண்டுள்ள பிரதேசமாகும். இதனைக் கருத்தில் கொண்டு சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே கொண்டு செல்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
இந்நிலையில் வெலிக்கடைச் சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே இடமாற்றும் அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். வெலிக்கடைச்சிறைச்சாலை இடமாற்றம் கைதிகளின் உறவினர்களுக்கு அநாவசிய தொந்தரவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், வெலிக்கடைச் சிறைச்சாலையின் கட்டிடங்கள் புராதன நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் என்றும் அக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாகவே வெலிக்கடைச் சிறைச்சாலையை இடமாற்ற தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த தரப்பினருடன் கலந்தாலோசனையொன்றை நடத்த அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

No comments:
Post a Comment