August 18, 2016

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை! கம்பீரமாக கிண்ணத்தை கைப்பற்றியது!

இலங்கை, அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என அவுஸ்திரேலியாவை வொயிட்வாஷ் செய்து கம்பீரமாக கிண்ணத்தை கைப்பற்றியது.


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் இலங்கை அணி முதல் இரண்டு போட்டியை வென்று முன்னதாகவே தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் கொழும்பில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது.

முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர், முதல் இன்னிங்சை விளையாடிய அவுஸ்திரேலியா அணி 379 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

324 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய அவுஸ்திரேலியா அணி, ஹெராத் சுழலில் 160 ஓட்டங்களுக்கு சுருண்டது. அசத்தலாக பந்து வீசிய ஹெராத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் இலங்கை அணி 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என அவுஸ்திரேலியாவை வொயிட்வாஷ் செய்து கிண்ணத்தை கம்பீரமாக கைப்பற்றியது.








No comments:

Post a Comment