ஆட்களை காணாமல் போகச் செய்தவர்கள் யாரென்பது வெளிச்சத்துக்கு வரப்போகின்றது என்ற அச்சம் கொண்டவர்களே காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதை எதிர்க்கின்றனர் என்றும் அரசாங்கம் அறிவித்தது.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்ட அறிவிப்பை அரசாங்கம் விடுத்தது.
இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்காக அமெரிக்க டாக்டர்களின் சேவை எமக்கு அவசியமில்லை.
யாழ்ப்பாணத்தில் 80 சதவீதமான தமிழ் டாக்டர்கள், வைத்திய நிபுணர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு மொழியும் தெரியும் வைத்திய தகைமைகளும் உள்ளது.
எனவே, விஷ ஊசி தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை எமது நாட்டு டாக்டர்களினாலேயே நடத்த முடியும்.
அதில் உண்மையுள்ளதா? இல்லையா என்பதனை பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
எமது டாக்டர்கள் திறமையானவர்கள்.
எனவே அமெரிக்க டாக்டர்களின் சேவை அவசியமில்லை.
அவ்வாறு வெளிநாட்டு டாக்டர்களின் சேவை தேவைப்படுமெனில்
அவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் சரியாக தருணத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும்.
அமெரிக்க டாக்டர்கள் வெளிநாட்டு டாக்டர்களின் சேவை தேவையா என்பதனை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். அதனை தீர்மானிக்கும் அதிகாரம் வேறு எவருக்கும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment