August 5, 2016

போதைப்­பொருள் கடத்­தப்­படும் மத்­திய நிலை­ய­மாக இலங்கை.!

சர்­வ­தேச ரீதியில் போதைப்­பொருள் கடத்­தப்­ப டும் மத்­திய நிலை­ய­மாக இலங்கை விளங்­கு­கி­றது. எனவே அந்த வலை­ய­மைப்பை முறி­ய­டித்து போதைப்­பொ­ரு­ளற்ற நாடாக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவை­யுள்­ளது. அதற்­கான வேலைத்­திட்­டத்தில் சக­லரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர தெரி­வித்தார்.


‘மது­சா­ர­மற்ற இலங்கை’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான தேசிய மாநாடு நேற்று காலை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்­டிற்குள் கடத்­தப்­படும் போதைப் பொருட்கள் அடிக்­கடி பொலி­ஸா­ரிடம் சிக்­கு­கின்­றன. அந்த தர­வு­களை நோக்­கும்­போது ஒவ்­வொரு மாதமும் போதைப் பொருள் கடத்தல் நட­வ­டிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தனை அறிய முடி­கி­றது. இறு­தி­யாக பொலி­சா­ரினால் கைப்­பற்­றப்­பட்ட314 கிலோ கிராம் கொகைன் கென­டா­வுக்கு கொண்டு செல்­வற்­கா­க­வேகே இங்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. எனினும் தற்­போது பொலிஸார் அதனைக் கைப்­பற்றி கனடா அர­சாங்­கத்­துடன் இணைந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மேலும் பொலி­சா­ரினால் மாத்­திரம் போதைப்­பொருள் வணி­கத்தை தடுக்க முடி­யாது. அதற்கு பொது மக்­களின் ஆத­ரவு அவ­சி­ய­மாகும். எனவே பொது­மக்கள் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்க வேண்டும். அவ்­வாறு தகவல் வழங்­கு­ப­வர்­களின் இர­க­சியத் தன்மை பாது­காக்­கப்­படும். மேலும் எமது நாட்டில் போதைப் பொரு­ளுக்­கெ­தி­ரான வேலைத் திட்­டங்­களை அர­சாங்கம் முன்­னின்று செயற்­ப­டுத்தி வரு­கி­றது. ஜனா­தி­பதி இது தொடர்பில் மிகுந்த அவ­தானம் செலுத்­து­வது வர­வேற்­கத்­தக்­கது.

போதைப்­பொருள் பாவ­னை­யினை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் மேலு­மொரு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­திட்டம் மாவட்ட மட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. மாவட்ட செயலாளரின் பங்களிப்புடன்அரசாங்க அதிகாரிகளையும் புத்திஜீவிகளையும் இணைத்து வழிநடத்தும் குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் அந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment