August 15, 2016

சம்பந்தன் மீது தாக்குதல்! மயிரிழையில் தப்பித்துள்ளார்

தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டத்தில் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியனைக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார் வடமாகாணசபையின் பேரவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன். எனினும் ஒலிவாங்கி வீச்சிலிருந்து மயிரிழையில் காயங்களின்றி தப்பித்துள்ளார் இரா.சம்பந்தன்.


கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சாந்தி சிறீஸ்கந்தராசாவிற்கு வழங்கியமை தொடர்பான சர்ச்சை விவாதம் உச்சடைந்திருந்த நிலையில் அதனை பேராசிரியர் சிற்றம்பலம் அல்லது பொருத்தமானவர்களிற்கு வழங்கியிருக்க வேண்டுமென வாதிட்ட அன்ரனி ஜெகநாதன் ஒரு கட்டத்தில் கோபமுற்று கையிலிருந்த ஒலிவாங்கியினை இரா.சம்பந்தன் மீது வீசியெறிந்துள்ளார். எனினும் தாக்குதலில் மயிரிழையில் இரா.சம்பந்தன் காயங்களின்றி தப்பித்துள்ளார். பின்னர் ஏனையவர்கள் அன்ரனி ஜெகநாதனை ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் தனது அரசியல் எதிர்காலத்தை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முதுகில் குத்தி இல்லாதாக்குவதாக பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்த நிலையில் தான் சிவஞானத்தின் நெஞ்சில் குத்தப்போவாதாக அன்ரனி ஜெகநாதனோ பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

தனது அரசியல் எதிர்காலத்தை இல்லாதொழிப்பதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மீது குற்றஞ்சாட்டியே அன்ரனி ஜெகநாதன் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment