August 4, 2016

ஓடி ஒழிந்தவர்கள் இன்று தலைவர்கள் என்கின்றனர்: சரத் வீரசேகர!

இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழர்களை அனாதைகளாக்கி ஓடி ஒழிந்த தமிழ் தலைவர்கள் இன்று தம்மை தமிழர்களின் விடுதலைத் தலைவர்கள் என அடையாளப்படுத்துவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ள
முன்னாள் அமைச்சரும் யாழ்.கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் சிங்களவர்களுக்கு எதிரான குரோதத்தை விதைப்பதை விக்கினேஸ்வரனும் சுமந்திரனும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். பல்கலைக்கழக மோதல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இனவாத ரீதியான கருத்துக்களை வெ ளியீட்டுள்ளார். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இவர் கொழும்பில் தமது பேரன்களுடன் சிங்களவர்களுடன் நெருக்கமாக வாழ்ந்து தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுகிறார். இதன் மூலம் பிரிவினைவாதக் கொள்கையை அவரது நோக்கமாகும்.

விக்கினேஸ்வரன் சுமந்திரன், சுமந்திரனுக்கு விட தமிழ் மக்கள் தொடர்பில் தலையிடுவதற்கு படையினருக்கு அதிக தார்மிக கடப்பாடு உள்ளது என்பது எனது கருத்தாகும். நான் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக கடமையாற்றியபோது தமிழ், சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாரிய பங்களிப்பினை வழங்கினேன். தமிழ் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கினோம்.

ஆனால் இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் அன்று எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. இறுதிக் கட்ட யுத்தத்தின்போது அப்பாவி தமிழ் மக்கள் பலாத்காரமாக புலிகளின் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். புலிகளால் மக்கள் கேடயங்களாக பிடிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது தமிழ் தலைவர்கள் ஓடி ஒழிந்தனர். மக்களை பாதுகாக்கவில்லை. படையினர் தான் தமிழ மக்களை பாதுகாத்தனர். விக்கினேஸ்வரன் தனது மகன்மாரை சிங்களவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் வடக்கு தமிழர்கள் சிங்களவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது. சிங்களவர்களை திருமணம் செய்யக் கூடாது என கூறி இனவாதத்தை திணிக்கின்றார்.

No comments:

Post a Comment