மாயமான ராணுவ விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய கப்பல் 2 நாட்கள் ஈடுபட்டும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மேலும் 2 அதிநவீன இந்தியக் கப்பல்கள் ஈடுபட உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் போர்ட்பிளேருக்கு 29 பேருடன் கடந்த மாதம் 22-ம் தேதி புறப்பட்டு சென்ற ஏ.என்.32 விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் கப்பல்கள், விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், அந்த விமானம் மற்றும் அதில் பயணம் செய்த 29 பேரின் கதி என்ன ஆனது என்று இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இதனால், அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேரின் குடும்பத்தினர் பரிதவித்து உள்ளனர்.
மாயமான விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருப்பதாக கூறப்பட்டாலும், இன்னும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமான விமானத்தை தேடும் பணி, 14-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ரஷ்ய நாட்டை சேர்ந்த ‘இகோர் பிலோவ்ஷோவ்’ என்ற கப்பல் நட்புறவு பயணமாக விசாகப்பட்டினத்துக்கு வந்தது.
இது பேரிடர் காலங்களில் கப்பல்கள் கடலில் மூழ்கினால் தேடும் பணியில் ஈடுபடுத்துவதற்காக ரஷ்ய கப்பல் படையில் இணைக்கப்பட்டது. நீரின் உள்ளே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் சாதனங்கள், நீர்மூழ்கி தேடும் வாகனம், ரேடார் கருவி உள்ளிட்ட அதிநவீன கருவிகள் இந்த கப்பலில் உள்ளன.
இந்த ரஷ்ய கப்பல் விசாகப்பட்டினத்துக்கு செல்லும் வழியில், மாயமான விமானத்தை தேடும் பணியில் 2 நாட்கள் ஈடுபடுத்தப்பட்டது. நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகள் மூலம் அறியும் ‘சோனார்’ தொழில்நுட்பத்தில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாயமான விமானம் குறித்த எந்த தடயங்களும் சிக்கவில்லை.
மாயமான விமானத்தை கண்டுபிடிக்க பாதுகாப்பு அமைச்சகம் தொடர்முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், தேடுதல் பணியில் மேலும் 2 இந்திய கப்பல்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் வசம் உள்ள ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் ‘சமுத்ரா ரத்னாகர்’ என்ற கப்பலும், பெருங்கடல் தொழில்நுட்ப தேசிய நிறுவனத்துக்கு சொந்தமான ‘சாகர்நிதி’ என்ற கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
‘சமுத்ரா ரத்னாகர்’ கப்பலில் கடல் அடுக்குகளை வரைபடமாக மாற்றும் தொழில்நுட்பம், காந்தமானி, புவி ஈர்ப்பு விசையை கணக்கிடும் கருவி, தண்ணீரின் உள்ளே பயன்படுத்தப்படும் கேமரா, கடல் நீரின் திசைவேகம் அறியும் கருவி, எந்தவித காலநிலையிலும் செயல்படக்கூடிய ஜி.பி.எஸ். கருவி, ஆய்வகங்கள், ஆழ்கடலில் ஒளிக்கற்றைகள் மூலம் ஆய்வு செய்யும் கருவி என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment