July 7, 2016

மீனவர்கள் பிரச்சனை விவகாரம்: மந்திரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த இந்தியா, இலங்கை முடிவு!

மீனவர்கள் பிரச்சனை விவகாரத்தில் மந்திரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும், இலங்கையும் முடிவு செய்துள்ளன.


இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே மீனவர்கள் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இடையே கச்சத் தீவு பிரச்சனையும் உள்ளது.

இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனை விவகாரத்தில் மந்திரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும், இலங்கையும் முடிவு செய்துள்ளன.

முன்னதாக இலங்கையின் ராஜாங்க அரசியல் மற்றும் சர்வதேச வர்த்தக துறை மந்திரி சமரவிக்ரமா இந்தியாவில் கடந்த ஜூலை 4-ம் தேதி இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் போது மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சமரவிகரமா சந்தித்து மீனவர்கள் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்தார்.

மேலும், பிப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டு ஆணைய கூட்டத்தின் பரிந்துரைகளின் படி மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர் தீர்வு காணப்பட வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது மீனவர்கள் பிரச்சனை விவகாரத்தில் மந்திரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த முடிவு எட்டப்பட்டது.

No comments:

Post a Comment