July 7, 2016

முறிகண்டியில் கிணற்றை பாவிக்க மக்களிற்கு தடைவிதித்துள்ள இராணுவம்!

முறிகண்டியில்   கிணற்றை  பாவிக்க மக்களிற்கு தடைவிதித்துள்ள இராணுவம் அதில் இருந்து பல குழாய்கள் மூலம் நீர்ப்பாச்சல் மேற்கொண்டு அருகில் உள்ள காட்டில் தமக்கான விவசாயம் செய்கின்றனர் .


முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டியில் உள்ள மக்களின் பெரும்பகுதி நிலம் இன்றுவரையில் விடுவிக்கப்படவில்லை.  இன்னும் பலரின் பல ஏக்கர் நிலத்திற்காக கால் ஏக்கர் அல்லது அரை ஏக்கர் நிலம் மாற்று இடங்களில் படையினரால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாழும் மக்கள் வாழ்வாதாரத்திற்கு விவசாயம் புரிவதற்காக அமைக்கப்பட்டுகிணற்றில்  வற்றாத நீர் காணப்படுகின்றது . இவ்வாறு காணப்படும் நீரை உரிமையாளர்கள் பயன்படுத்த முடியாதவாறு தடைபோட்டுள்ள இராணுவத்தினர் பல மோட்டார்கள் மூலம் தமது முகாம் பகுதிக்கு நீர் பாச்சி விவசாயம் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு இடம்பெறுவது தொடர்பில் எந்த திணைக்களத்தின் அதிகாரிகளும் சென்று பார்வையிட முடியாதவாறு தடை போடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்த குடும்பங்கள் இன்று கூலிவேலையை நாடிச் செல்கின்றனர். இம்மக்களின் நிலத்தில் மக்கள் அமைத்த கிணற்றில் இராணுவம் விவசாயம் புரிகின்றது.

இவ்வாறு நீர் பெறப்படும் கிணற்றின் அருகில் நிரந்தரமாக இராணுவம் கிணற்றிற்கும் அதன் இயத்திரங்களிற்கும் காவல் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

சொல்லாட்சி அரசில் விவசாயத்தை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும் அவை இன்றும் பேச்சளவிலேயே காணப்படுகின்றது என்பதற்கான சான்றுகளில் இதுவும். ஒன்றாக காணப்படுகின்றது.

No comments:

Post a Comment