July 21, 2016

வாழ்வாதார வாய்ப்புக்களின்றி அல்லல்படுகிறது கிளிநொச்சி மாவட்டம்!

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினுடைய அனுசரணையினால் கிளிநொச்சி மாவட்டச்செயலகம் நடாத்திய ஆடை வடிவமைத்தல், உள்ளூர் உற்பத்திக் கண்காட்சிஇன்று பாரதி நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி உறுப்பினர் திருமதி. சுனேத்திரா தலைமை வகிக்க வடமாகாணப் பணிப்பாளர் பெலிசியன் சிறப்பு விருந்தினராகவும், மாவட்டச் செயலர்
சுந்தரம் அருமநாயகம் முதன்மை விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக கரைச்சி பிரதேச செயலர் -நாகேஸ்வரன், கண்டாவளைப் பிரதேச செயலர் – முகுந்தன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் – திருமதி ஜெயராணி, பூநகரிப் பிரதேச செயலர் கிருஸ்ணேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இக்கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்து வைத்து முதன்மை உரையாற்றிய அரச அதிபர்,
கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்ற அம்சங்கள் யாவும் உற்பத்தித் தரமும், தொழில் நுட்பச் சேர்க்கையும் உள்ளதாக இருக்கிறது. கிளிநொச்சி ஒரு விவசாய மாவட்டம் என்பதாலே விவசாயத்துறை சார் உள்ளூர் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
சந்தை வாய்ப்புக்களை அனுமானித்து உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எங்களுடைய மாவட்டத்தைப் பொறுத்தவரை உற்பத்திகளை மேற்கொள்வதற்கு நிதி வசதி நெருக்கடியாக இருக்கிறது.
வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் போதிய அக்கறை காட்டப் படுவதில்லை. பதின்மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதரா உதவிகள் வழங்க வேண்டியிருக்கிறது.
இங்கு பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் தங்களது உற்பத்தித்திட்டங்களை முன்வைத்தால் அவற்றுக்கு உதவ நாம் தயாராகவுள்ளோம். என்றாலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் குறித்து நான் திருப்தி அடையாதவனாகவே இருக்கிறேன்’ என்றார்;.

No comments:

Post a Comment