July 7, 2016

மூடி மறைக்கப்பட்ட தமிழர் ; அடங்கா தமிழன்!

இலங்கையில் தமிழ் மக்களை அடக்கியே அரசாட்சி நடாத்தப்படல் வேண்டும் என்பது சுதந்திரத்திற்கு பின் மிகவும் கச்சிதமாக முறையில் அரங்கேற்றப்படும் தொடர் நடவடிக்கையாகும்.


அதில் அவ்வப்போது தமிழ் தலைமைகள் சிக்கிக்கொள்வதும், அதை பற்றிய கருத்துக்களை காலம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ளப்படுவதும் வழமையானதேயாகும்.

இருப்பினும், விடுதலைப்புலிகளின் ஆரம்பம் அவர்களின் நடவடிக்கைகள் இனவாத அரசியல் தலைவர்களை சற்று தடுமாற்றத்தில் நிலை நிறுத்திய போதும், தமிழ் சுயநலவாத அரசியல் தலைமைகளினால் விடுதலைப்புலிகளின் பலத்தையும், பலவீனத்தையும் அவ்வப்போது அரசுடன் பகிர்ந்துக்கொண்டு, கிடைக்கும் சலுகைகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டே தங்களையும், தங்களின் உறவுகளையும் செழிப்பான வாழ்வில் திக்குமுக்காடிக்கொண்டிருந்தார்கள்.

வடக்கில் கூறுவது பொது மகனுக்காக,  தெற்கில் தெரிவிப்பது சுய நலத்திற்காக, கடைசியில் கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாக, இது தொடர்கதையாகவே இருக்கின்றது.

இருந்தும் இக்காலப்பகுதியில் சிங்களம் தனது மறைமுகமான இனமாற்றத்தை செய்துக்கொண்டுதான் வருகின்றது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளின் மீதுதான் தமிழ் அரசியல் வாதிகளின் கண்காணிப்பும் கவனமும் இருக்கும்.  ஏனைய பகுதிகளில் தமிழர் வாழ்கின்றார்களா? என்பது அவர்களுக்கே தெரியாது., அதில் அக்கரைபடுவதும் இல்லை.

இதையே சிங்களம் தனது வாய்ப்பாக்கிக்கொண்டு இனமாற்றத்தை செயல்படுத்துகின்றது.

அப்படி இனமாற்றமா? என்பது அரசியல்வாதிகளுக்கு தெரிந்தாலும், அது பற்றி வாய் திறக்காதிருப்பதே சிங்களத்திடம் அவர்கள் பெரும் சன்மானம் ஆகும்.

தென்பகுதி பிரதேசங்களை நாம் சற்று பார்த்தோமேயானால், இந்திய தோட்ட தொழிலாளர்களே அதிகமாக வாழ்கின்றார்கள். நகரங்களிலும் அரசு உத்தியோகஸ்தர்களாகவும், வடபகுதி  சென்றவர்களில் சிலர் காணி கட்டிடங்கள் என்று சொந்தமாக வைத்திருந்த காலமும் உண்டு.

ஆனால் இப்பொழுது அப்படியா? அவர்களே இனவாத செயல்கள் மூலம் சிறிது சிறிதாக சிங்களம் வெளியேற்றிவிட்டது.

அதே போல் தோட்ட தொழிலாளியாக இருந்த தமிழர்களும், தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மூலம் கல்வி கற்றுக்கொள்ள பாடசாலைகள்,  இல்லாமையாலும், வன் செயல்கள் ஸ்ரீரிமா சாஸ்திரி ஒப்பந்தம் போன்றவற்றால் கூட்டமாக வாழ்ந்தவர்கள் பிரிந்து செல்ல நேரிட்டது.

அதன் பயனாக வசதியின்றி வாழ்ந்த ஒரு சில குடும்பங்களும்,  தங்களின் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியிலேயே கல்வி கற்கும் நிலையை உருவாக்கிவிட்டார்கள். ஏன் தங்களின் வீடுகளிலும் சிங்கள மொழி மூலமே கதைக்கும் நிலையேற்பட்டுவிட்டது.

ஆகவே சிங்களம் தமிழர்களை சிறிது சிறிதாக அகற்றியதோடு வேறு வழியில்லாத மக்களை சிங்களமாகவே மாற்றிவிட்டது.

அதற்கு உதாரணமாக பல பிரதேசங்களை நாம் குறிப்பிட முடியுமானாலும், குறிப்பாக இன்றும் வருடா வருடம் யாத்திரை செல்லும் கதிர்காமத்தை நாம் எடுத்துக்கொண்டால், அங்கே நடந்தது என்ன? நடைபெறுகின்றது என்ன? என்பதை சகல தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் நன்கு தெரியும்.

அந்த புனித பூமியில்  வாழ்ந்த  தமிழர்களில் பெரும்பாலானோர், வன் செயல் மூலம் அடித்து விரட்டப்பட்டு விட்டார்கள். அங்கு ஆலயங்களில் பூசகராக தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் நிரந்தரமாக வசிப்பவர்கள் இல்லை அங்கு தமிழ் பாடசாலைகள் இல்லை.

தற்பொழுது சுமார் 250ற்கு உற்பட்டவர்களே நிரந்தரமாக வாழ்கின்றார்கள். ஆனால் அவர்களின் சில வயது முதிர்ந்தவர்கள் மாத்திரமே தமிழ் மொழியில் பேசுகின்றார்கள்.  ஏனைய இளம் சமுதாமோ, தமிழ் மொழியையே மறந்து சிங்கள மொழியிலேயே தங்களின் சகல நடவடிக்கைகளையும் செய்கின்றார்கள்.

கதிர்காம கந்தனுக்க கூட ருகுனு தெய்யோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது.

முருகனின் கையில் உள்ள வேல் ஓம் என்றவைகள் மூடி மறைக்கப்பட்டு தமிழர்களின் கலாசாரங்கள் அங்கே மறக்கப்பட்டுவிட்டது.

உலகிலேயே புராதன மொழிகளில் முதலாவதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 10மொழிகளில் தமிழ் மொழிகளில் தமிழ்மொழி முதலாம் இடத்தில் இருக்கின்றது.

2 மொழியாக சமஸ்கிருதமும்

3 எகிப்தியனும்

4 கிரீக் மொழியும்

5 சீன மொழியும்

6 அரேபிய மொழியும்

7 ஹீபூறு மொழியும்

8 கொரிய மொழியும்

9 ஆர்மேனியன் மொழியும்

10 லத்தீன் மொழியும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முக்கிய புராதன மொழிகள் பேசுபவர்களில், தமிழர்களே சமஸ்கிருதம் பேசுபவர்கள் தவிர்ந்து ஏனையோர் சொந்த நாடுகளிலேயே வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உலகமே தமிழர்கள் இன்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் சிறுபாண்மையினராகவே வாழும் நிலைக்கு புராதன காலம் தொட்டு காட்டி கொடுத்து வாழ்ந்த/வாழும் தமிழ் இனமே காரணமா? அல்லது அடங்கா தமிழன் என்று அறிக்கையுடன் அன்றும் இன்றும் வாழ்ந்த/ வாழும் அரசியல் வாதிகள் காரணமா? இல்லை தமிழ் இனமே காரணமா? என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

இந் நிலையில் நமது நாட்டில் நாம் ஐக்கியமாக வாழ விரும்பினாலும், அதை தடுத்து பல்வெறு வழியிலும் தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்து வரும் இனவாதிகள் விடுதலைப்புலிகளின் மௌனித்த யுத்தத்தின் பின்பும், இங்குள்ள சகல தமிழ் ஆரசியல் தலைவர்களையும், தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழர்களின் பிரச்சனைகளையும், இழுத்தடிப்பு செய்து வந்தாலும், அதை பொருத்து வாய் திறக்காதிருக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.

இவ்வாறான நிலையில் தமிழர்களின் இன அழிப்பையும், இன்னல்களையும் சர்வதேசத்திற்கு எடுத்து சென்ற புலம்பெயர் தமிழர்கள்,  அநீயாயங்களுக்கு நீதி கேட்டுக்கொண்டு, இவ்வேலையிலும் இலங்கை ஆட்சியாளர்கள் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண்பதை விட்டு காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, எமக்காக போராடிக் கொண்டிருப்பது புலம் பெயர் அமைப்புக்களின், முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி அவர்களை மடக்க முயற்சிகளை செய்து வருவதாகவே தகவல்கள் கூறுகின்றது.

எனவே அடங்கா தமிழனாக இப்பொழுது புலம்பெயர் உறவுகளும், அமைப்புக்களும் எமது நிலையை புரிந்து அரச தலைவர்களுடன் பேசினாலும் உடனடியான தீர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்து,

கைதிகள் விடுதலை
காணி விடுவிப்பு
காணாமல் போனவர்களின் நிலை அதற்கான செயல்பாடுகளை நிரந்தர தீர்வுக்கு முன் அரசு மேற்குறிப்பிட்ட தீர்க்க தங்களின் முழு அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே இலங்கை வாழ் தமிழர்களின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment