July 5, 2016

சிறுமி கொலை வழக்கு! சந்தேகநபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

தமிழகத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவாதி, வினுப்பிரியாவை தொடர்ந்து சேலம், தெலுங்கனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


கடந்த சனிக்கிழமை காணமல் போன குறித்த சிறுமி, அயல் வீட்டில் மூடி வைக்கப்பட்ட சமயல் பாத்திரம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் அதேபகுதியினை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது பொலிஸாரையே அதிர வைக்கும் சில தகவல்களை சந்தேகநபர் கூறியுள்ளார்.

பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய சந்தேகநபர் ” தனக்கு நெருக்கமான சிலர் தன் கண் முன்னே பாலியல் தொழிலில் ஈடுபட்டனர்.

சிறுவயது முதல் அதையே பார்த்து வளர்ந்ததால், தனக்குள்ளும் இப்படியான எண்ணங்கள் தானாகவே தோன்றியது.

அத்துடன் சில குடும்ப பெண்களிடம், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தானும் பாலியல் இச்சையில் ஈடுபட்டதாக குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்த பகுதி மக்கள், “சிறுவனுக்கு 18 வயது ஆகிவிட்டது. கடந்த ஆண்டு பாடசாலையில் சக மாணவனிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளான்.

இதனால் ஊருக்குள் வருவதற்கு சிறுவனுக்கு தடை விதித்திருந்தோம். 9 மாதங்களுக்கு பின்னர் ஊர் திரும்பிய நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான்.

மேலும், குறித்த சம்பவத்தில் சிறுவனின் தாத்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளார்.

எனவே, சிறுவனின் தாத்தாவையும் கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை, சிறுவனின் தாயார் 2 லட்சம் பணம் தருவதாக கூறி சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்”.

இதேவேளை, சந்தேகநபரான சிறுவனின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது 11 கையடக்க தொலை பேசிகளையும், 35 மெமரி கார்ட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள அனைத்து மெமரி கார்ட்டுகளிலும் ஆபாச படங்களே இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment