July 23, 2016

ம ன்­னாரில் நடை­பெற்ற தடம் மாறு­கி­றதா தமிழ்த்­தே­சியம்!

ம ன்­னாரில் நடை­பெற்ற தடம் மாறு­கி­றதா தமிழ்த்­தே­சியம் என்ற தலைப்­பி­லான கருத்துப் பரி­மாற்ற நிகழ்வு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் செயற்­பா­டு­களில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. இது பல­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருக்­கின்­றது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்கள் கூட்டம், கூட்­ட­மைப்பின் இணைப்­புக்­குழு கூட்டம் மற்றும் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் என பல­த­ரப்­பட்ட மட்­டங்­க­ளி­லான கூட்­ட­மைப்பின் கூட்­டங்­களில் மறை­பொ­ரு­ளா­கவும், வெளிப்­ப­டை­யா­கவும் இறுக்கி மூடிய கத­வு­க­ளுக்குள் இடம்­பெற்ற கருத்துப் பரி­மாற்­றங்கள், மன்­னாரில் நடை­பெற்ற இந்த கருத்துப் பரி­மாற்ற நிகழ்வில் வெளிப்­ப­டை­யா­கவும் பகி­ரங்­க­மா­கவும் இடம்­பெற்­றி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும்.
ம ன்­னாரில் நடை­பெற்ற தடம் மாறு­கி­றதா தமிழ்த்­தே­சியம் என்ற தலைப்­பி­லான கருத்துப் பரி­மாற்ற நிகழ்வு தமிழ்த்­தே­சிய கூட்­
இந்தக் கருத்­தாடல் நிகழ்­வுக்கு குறிப்­பிட்டு அழைக்­கப்­பட்­ட­வர்­களே அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், சமூகம் மற்றும் அர­சியல் மட்­டங்­களில் பல தள நிலை­களில் உள்­ள­வர்கள் முக்­கி­ய­மாகப் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.
இந்தக் கருத்துப் பரி­மாற்ற நிகழ்வு இடம்­பெற்ற மன்னார் கீரியில் உள்ள ஞானோ­தயம் மண்­டபத்தில் மூன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் சிவில் சமூக அமை­யத்­தி­னரால் முன்னாள் அருட் தந்தை ஜெய­பாலன் தலை­மையில் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­ட­கையின் முன்­னி­லையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு மற்றும் தமிழ்த்­தே­சிய முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்ட சந்­திப்பு ஒன்று நடை­பெற்­றி­ருந்­தது. இதில் சிவில் சமூக அமைப்­புக்­களின் முக்­கிய பிர­தி­நி­தி­களும் அருட்­தந்­தை­யர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
இந்தச் சந்­திப்பு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் கட்­ட­மைப்­புக்கு வெளியில், அப்­போ­தைய நிகழ்­கால அர­சியல் மற்றும் தமிழ் அர­சி­யலின் போக்கு என்­ப­வற்றை ஆராய்ந்து தீர்­மா­னங்கள் எடுக்­கத்­தக்க வகையில் இடம்­பெற்­றி­ருந்­தது. அந்த வகையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் புறநிலை அர­சியல் வெளியில் இடம்பெற்­றி­ருந்த முக்­கி­ய­மான ஒரு சந்­திப்­பாக அந்த நிகழ்வு இடம்­பெற்­றி­ருந்­தது.
ஆயினும் அந்த நிகழ்வு குறித்து விரி­வான தக­வல்கள் ஊட­கங்­க­ளுக்கு உட­ன­டி­யாக வழங்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று, அங்கு கலந்­து­ரை­யா­டப்­பட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து மக்­க­ளுக்கு வேறு சந்­தர்ப்­பங்­க­ளிலும் அர­சியல் தலை­வர்­க­ளினால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
முதல் சந்­திப்பின் முடி­வுகள்
முடங்கிப் போயின
இந்த நிகழ்வு தொடர்­பான செய்­தி­களைச் சேக­ரிக்கச் சென்­றி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது கடுமை கடைப்­பி­டிக்­கப்­பட்ட பின்பே தக­வல்கள் வழங்­கப்­பட்­டன. பொது­மக்­க­ளு­டைய அர­சியல் பிரச்­சி­னை­பற்றி பல்­வேறு தரப்­புக்­களைச் சேர்ந்த அர­சியல் தலை­வர்­க­ளி­னாலும் பிர­மு­கர்­க­ளி­னாலும் கருத்­துக்கள் முன்வைக்­கப்­பட்ட போதிலும், அவை குறித்த தக­வல்­களை வெளி­யி­டு­வ­தற்கு அப்­போது தயக்கம் காட்­டப்­பட்­டி­ருந்­தது.
அன்­றைய சந்­திப்பில் மிக முக்­கி­ய­மாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்­குள்ளே அர்த்த புஷ்­டி­யான ஒற்­றுமை நிலவ வேண்டும் என்­பது வலி­யு­றுத்­தப்­பட்டு, அதற்­கா­னதோர் ஆரம்­ப­கட்ட நிகழ்­வா­கவே அந்த நிகழ்வு ஒழுங்­க­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் சிவில் சமூ­கத்­தி­ன­ரு­டைய ஆலோ­ச­னைக்­க­மை­வாக தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் செயற்­பா­டு­களை ஒன்­றி­ணைத்து முன்­னெ­டுக்கும் நோக்­கத்­துடன், ஒரு தேசிய சபையை உரு­வாக்க வேண்டும் என்ற நோக்­கமும் அந்தச் சந்­திப்பில் மிக முக்­கி­ய­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.
அர­சி­யல்­வா­திகள், துறை­சார்ந்­த­வர்கள், சிவில் சமூ­கத்­தினர் என பல தரப்­பட்­ட­வர்­களின் பிர­தி­நிதித்­து­வத்தை உள்­ள­டக்­கி­ய­தாக அந்தத் தேசிய சபையை உரு­வாக்க வேண்டும் என்றும் அந்தச் சபையே தமிழ் மக்­களின் அர­சியல் செயற்­பா­டு­களில் முக்­கிய தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு செயற்­ப­டுத்­து­கின்­றதோர் அங்­க­மாக அந்தச் சபை அமைய வேண்டும் என்றும் ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் யாப்பு ஒன்றைத் தயா­ரிப்­ப­தற்­கான குழுவும் அமைக்­கப்­பட்­டது,
ஆனால், அந்தச் சந்­திப்­புடன் அங்கு கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்­களும், எடுக்­கப்­பட்ட முடி­வு­க­ளும்­கூட, கிடப்பில் போடப்­பட்­டு­விட்­டன.
இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான், மன்னார் மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஒன்­றி­யத்­தினால் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட 'தடம் மாறு­கி­றதா தமிழ்த்­தே­சியம்' என்ற தலைப்­பி­லான கருத்­துப்­ப­கிர்வு நிகழ்வு இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் இளைஞர் அணித் தலை­வ­ரா­கிய வி.எஸ்.சிவ­கரன் தலை­மையில் நடை­பெற்­றது.
முன்னாள் மட்­டக்­க­ளப்பு ஆயரும், மன்னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­ல­க­ரு­மா­கிய கிங்ஸ்லி சுவாம்­பிள்ளை மற்றும் திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் நோயல் இமா­னுவேல் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, சிவ­சக்தி ஆனந்தன், சித்­தார்த்தன் வடக்கு, கிழக்கு மாகாண சபை­களின் குறிப்­பிட்டு அழைக்­கப்­பட்ட உறுப்­பி­னர்கள், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், அருட்­தந்­தை­யர்கள், அர­சியல் விமர்­ச­கர்கள், செய்­தி­யா­ளர்கள் என பல­த­ரப்பட்டவர்­களும் இந்தக் கருத்­தாடல் நிகழ்வில் அழைப்­பின்­பேரில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
கார­சா­ர­மான கருத்­துக்கள்
சிவ­கரன் உட்­பட ஐந்து பேர் இங்கு முக்­கிய கருத்­து­ரை­யாற்­றி­னார்கள். சிவ­கரன் இந்தக் கலந்­து­ரை­யா­டலின் நோக்கம் குறித்து தனக்கே உரிய பாணியில் - பேச்சு நடையில் சம­கால அர­சியல் நிலை­மை­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பொது­வான செயற்­பா­டுகள், அர­சியல் தலை­வர்­களின் போக்­குகள் செயற்­பா­டுகள் குறித்து எடுத்­து­ரைத்தார். ஏனைய நான்கு பேரும் வெவ்வேறு தலைப்­புக்­களில் தமது கருத்­து­ரை­களை வடி­வ­மைத்­தி­ருந்­தனர். அதனைத் தொடர்ந்து இந்தச் சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­களில் பெயர் குறித்து அழைக்­கப்­பட்­ட­வர்கள் முன்னால் வந்து தமது கருத்­துக்­களை முன் வைத்­தனர். இவர்­களில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இலங்­கையின் உள்ளூர் அர­சியல் மட்­டத்­திலும் சர்­வ­தேச அரங்­கிலும் தமிழ் அர­சி­யலின் செல்­நெறி போக்கு குறித்து இந்தக் கருத்­து­ரை­களில் காட்­ட­மான விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. ஜெனிவா மனித உரிமைப் பேரவை தீர்­மா­னத்­திற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் இரா­ஜ­தந்­திர முறையில் முடக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் ஒரு கருத்து கார­சா­ர­மான முறையில் முன்வைக்­கப்­பட்­டி­ருந்­தது.
நீதிக்­கான நிலை­மா­று­காலச் செயற்­பா­டுகள் பற்­றியும், இணக்க அர­சியல் என்று சாதா­ர­ண­மாகக் கூறப்­ப­டு­கின்ற – அர­சாங்­கத்­துடன் மென்­போக்கில் இணைந்து செயற்­ப­டு­கின்ற நடை­முறை குறித்தும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.
தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பொது­வான செயற்­பா­டுகள் மற்றும் கூட்­ட­மைப்புத் தலை­மையின் செயற்­பா­டுகள் என்­பன பொது­வாக கடும் விமர்­ச­னத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டன.
போருக்குப் பின்­ன­ரான கடந்த ஏழரை ஆண்­டு­களில் தமிழ் அர­சி­யலில் குறிப்­பிட்டு ஆறு­த­ல­டையத் தக்க வகை­யி­லான முன்­னேற்­றங்கள் நிக­ழ­வில்லை என்று இங்கு இடித்­து­ரைக்­கப்­பட்­டது. சில மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. சட்டம் ஒழுங்கைப் பேணும் விட­ய­த்தில் முன்­னேற்றம் காணப்­பட்­டுள்ள போதிலும், அதற்­கேற்ற வகையில் நிலைமை பாதிக்­கப்­பட்ட மக்­களை திருப்தி கொள்ளச் செய்­ய­வில்லை என்­பதும் இங்கு பல­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள், கூட்­ட­மைப்புத் தலை­மையின் செயற்­பா­டுகள் என்­பன மக்­க­ளுக்குத் தன்­னம்­பிக்கை ஊட்­டத்­தக்க வகையில் அமை­ய­வில்லை. அதற்­கேற்ற வகை­யி­லான வியூ­கங்­களும், மூலோ­பாயச் செயற்­பா­டு­களும் காணப்­ப­ட­வில்லை என்­பது இங்கு கூடி­ய­வர்­களின் பொது­வான அர­சியல் ஆதங்­க­மாக அமைந்­தி­ருந்­தது. தமிழ் மக்­களின் எதிர்­கால அர­சியல் நிலைமை குறித்து பல­ரு­டைய கருத்­துக்­க­ளிலும் கரி­ச­னையும் ஆழ்ந்த கவ­லையும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.
ஆயினும் இந்தச் சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­களில் ஓரி­ரு­வரைத் தவிர ஏனைய அனை­வரும் நிதா­ன­மா­கவும், ஆழ­மா­கவும் தங்­க­ளு­டைய கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். எவரும் உணர்ச்­சி­வ­சப்­ப­டா­தி­ருந்­தமை இந்தச் சந்­திப்­பிற்கு மெரு­கூட்­டி­யி­ருந்­தது என்றே கூற வேண்டும்.
பொறு­மை­யாகச் செவி­ம­டுத்­தனர்
இந்தச் சந்­திப்பில் வெளி­யி­டப்­பட்ட கருத்­துக்­களை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனும், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவும் மிகுந்த பொறு­மை­யுடன் செவி­ம­டுத்­தனர். இடை­யி­டையே தங்­க­ளுக்குள் கருத்­துக்­களைப் பரி­மா­றிக்­கொண்­ட­துடன், கருத்­துக்­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்­களில் தாங்கள் முக்­கி­ய­மாகக் கரு­தி­ய­வைகள் குறித்து குறிப்­புக்­களை எடுத்­த­தையும் காணக் கூடி­ய­தாக இருந்­தது.
வன்­மு­றை­யா­னதோர் ஆயுதப் போராட்டம் பேர­ழி­வோடு முடி­வுக்கு வந்­ததன் பின்னர், மென்­முறை போராட்­டங்­களின் ஊடா­கவே தமிழ் மக்­களின் அர­சியல் நகர்த்தி, முன்­னெ­டுத்துச் செல்­லப்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது என்­பதை எல்­லோரும் ஏற்­றுக்­கொண்­டி­ருப்­பதை இந்தக் கருத்­தாடல் மிகத் தெளி­வாகப் பிர­தி­ப­லித்­துள்­ளது. மென்­முறை போக்கில் நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் (இணக்க) அர­சியல் நடத்­தி­னாலும், தமிழ் மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள எரியும் பிரச்­சி­னைகள் குறித்து அர­சாங்­கத்தின் மீது அதே மென்­மு­றையில் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து அர­சாங்­கத்தைச் செயற்­பட வைக்க வேண்டும் என்ற கருத்து இங்கு வலி­யு­றுத்­தப்­பட்­டது.
அர­சா­ங்­கத்­திற்கு அர­சியல் ரீதி­யாக நெருக்­க­டிகள் ஏற்­படும் என்­ப­தற்­காக, பிரச்­சி­னை­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள பாதிக்­கப்­பட்ட மக்­களின் அர­சியல் நலன்­களை பலி­கொ­டுக்க முடி­யாது என்­பது அழுத்­த­மாக இந்தக் கருத்­தா­டலில் வெளிப்­பட்­டி­ருந்­தது.
பொறுமை காக்க வேண்டும். நிலை­மை­களைக் குழப்பக் கூடாது. ஓர­ணியில் திரண்டு தமிழ் மக்­களின் ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்­தனின் வழ­மை­யான கூற்­றுக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு இத்­த­கைய போக்கில் இருந்து தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு விடு­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது.
யுத்தம் முடி­வ­டைந்து பல ஆண்­டுகள் கழிந்து, புதிய அர­சாங்­கத்­திற்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கிய தமிழ் மக்­களின் சார்பில் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு வழங்கிச் செயற்­பட்டு வந்­த­போ­திலும், பிரச்­சி­னைகள் குறை­வ­டை­வ­தற்குப் பதி­லாக பிரச்­சி­னைகள் அதி­க­மா­கி­யி­ருப்­ப­தையும் மக்கள் சில­பல விட­யங்­களில் மோச­மான நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தையும் இந்தக் கலந்­து­ரை­யாடல் மிகுந்த அக்­க­றை­யுடன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
தமிழ்த்­தே­சியம் தடு­மா­ற­வில்லை
இங்கு கருத்­து­ரைத்­த­வர்­களில் சிலர் தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள், கூட்­ட­மைப்புத் தலை­மையின் போக்­குகள் என்­ப­வற்றை நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். வீணான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்கும் வகையில் இங்கு பலர் கருத்­துரைத்ததா­கவும் அவர்கள் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர்.
தமிழ் அர­சியல் தலை­வர்­களை ஓரங்­கட்டி, அவர்கள் மீது வெறு­மனே குற்றம் சுமத்­து­கின்ற போக்கில் கருத்­துக்கள் வெளி­யிட்­டி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­ற­துடன், நீங்கள் என்று தலை­வர்­களை மாத்­திரம் சுட்­டு­வதை நிறுத்தி, நாங்கள் என்று பங்­கா­ளர்­க­ளாக விட­யங்­க­ளுக்குப் பொறுப்­பேற்று தலை­வர்­களை வழி­ந­டத்த முயற்­சிக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கு முன்­வைக்­கப்­பட்­டது.
இறு­தி­யாக அர­சியல் தலை­வர்கள் வரி­சையில் கருத்­து­ரைத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புளொட் அமைப்பின் தலை­வ­ரு­மா­கிய சித்­தார்த்தன், இந்தக் கருத்­தா­டலின் தலைப்பு குறித்தும் கருத்து வெளி­யிட்டார். (வேறு சிலரும் இது குறித்த தமது எண்­ணப்­பா­டு­களை வெளி­யிட்­டி­ருந்­தனர்) தமிழ்த்­தே­சியம் தடம் மாறலாம். ஆனால் தடு­மா­றக்­கூ­டாது. நாங்கள் அதனைத் தடு­மா­ற­வி­டவும் மாட்டோம் என அழுத்தி உரைத்­தார்.
'நாங்கள் பல ஆண்­டுகள் அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருக்­கின்றோம். தமிழ்த்­தே­சி­யமே அதற்கு முக்­கிய காரணம். தமிழ்த்­தே­சி­யத்தில் புடம்­போட்­ட­வர்­களே அர­சி­யலில் இருக்­கின்­றார்கள். எனவே நாங்கள் அதில் ஒரு­போதும் தடு­மாறப் போவ­தில்லை. தமிழ்த்­தே­சி­யத்­திற்­கான போராட்டம் அல்­லது அர­சியல் செல்­நெ­றியில் தடம் மாறலாம். உலகின் முக்­கிய விடு­தலைப் போராட்­டங்கள் பலவும் தடம் மாறிச் செயற்­பட்­டி­ருக்­கின்­றன. அது அவ­சி­ய­மும்­கூட. ஆனால் கொண்ட கொள்­கையில் தடு­மா­ற­வில்லை. அவ்­வாறே நாங்­களும் செயற்­ப­டு­கின்றோம்' என்றார் சித்­தார்த்தன்
இங்கு கருத்­து­ரைத்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈ.பி­.ஆர்.­எல்.எவ். கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், இந்தக் கருத்­தா­டலில் வெளி­யி­டப்­பட்ட ஆதங்­கங்கள், கவ­லைகள், கரி­ச­னைகள் தொடர்­பான கருத்­துக்கள் யாவும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் உயர்மட்ட கூட்­டங்­களில் தங்­களால் ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­ட­வையே என சுட்­டிக்­காட்­டினார்.
அவ்­வாறு கருத்­துக்­களை வெளி­யிட்டு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் போக்கில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு எடுத்த முயற்­சிகள் வெற்­றி­பெ­ற­வில்லை. ஒரு சிலரே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பெய­ரி­லான முடி­வு­களை மேற்­கொண்டு செயற்­ப­டு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.
இத்­த­கைய போக்கில் மாற்றம் அவ­சியம். தமிழ் மக்­களின் அர­சியல் முன்­னேற்­றப்­பா­தையில் செல்­வ­தற்கு அது அவ­சியம். இன்­றி­ய­மை­யா­தது என குறிப்­பிட்டார்.
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் மூன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் இங்கு நடை­பெற்ற அர­சியல் சந்­திப்பை நினை­வு­கூர்ந்து, அத்­த­கைய சந்­திப்­புக்கள் அதன் பின்னர் இடம்­பெ­றாமல் போனமை குறித்து கவலை வெளி­யிட்டார். முன்னாள் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­ட­கையின் முன்­னி­லையில் நடை­பெற்ற அந்தச் சந்­திப்பைப் போலல்­லாமல் இந்தச் சந்­திப்பு அடுத்­த­டுத்த கருத்துப் பரி­மா­றல்­க­ளுக்கும், பரி­மா­றப்­ப­டு­கின்ற கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் காரி­யங்­களை முன்­னெ­டுத்து முன்­னே­று­வ­தற்கும் தடம் மாறு­கி­றதா தமிழ்த்­தே­சியம் என்ற கருத்­தாடல் வழி சமைக்க வேண்டும். அதற்­கான ஆரம்பப் புள்­ளி­யாக இது திகழ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வழ­மை­யான போக்கில் மாற்­ற­மில்லை
இறு­தி­யாக இந்தச் சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் எழுப்­பி­யி­ருந்த நியா­ய­மான கேள்­விகள், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தலை­மையின் மீது வைக்­கப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டுக்கள், பொது­வான கருத்­துக்கள் என்­பன குறித்து தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஆகியோர் பதி­ல­ளிக்கும் வகையில் கருத்­து­ரை­யாற்­றினர்.
இந்தக் கருத்­தா­டலில் முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்கள் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ரா­ஜாவின் மனதைப் பெரிதும் வருத்­தி­யி­ருந்­தன. வெளிப்­ப­டை­யா­கவே அவர் அதனைக் குறிப்­பிட்டார். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளா­கிய தங்கள் மீது அவ நம்பிக்கை கொண்­டி­ருக்­கின்­றீர்­களா என்ற தொனியில் அவ­ரு­டைய கருத்­துக்கள் சில அமைந்­தி­ருந்­தன. வழமை போன்று நீண்ட உரை­யாற்­று­வ­தற்கு அவ­ருக்கு சந்­தர்ப்பம் அளிக்­கப்­ப­ட­வில்லை. அதனால் வர­லாற்று நிகழ்­வுகள் குறித்தும், தமது அரசியல் பயணத்தின் அனுபவங்கள் குறித்தும் பேசுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. ஆயினும் நீண்ட நேரம் உரையாற்றிய அவர் கருத்தாடலில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் பலவற்றிற்குப் பதிலளிக்கவில்லை.
அவரைத் தொடர்ந்து இறுதியாகக் கருத்துரைத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகவும் நிதானமாக விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கு முயற்சித்தார். நீண்ட வரலாறு ஒன்றை அவர் குறிப்பிட்டு, நிலைமைகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்ற போதிலும் முன்னேற்றம் போதாது என்ற யதார்த்த நிலைமையை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் நல்லாட்சி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விடயங்களில் குழப்ப வேண்டாம். பொறுமையாகச் செயற்பட வேண்டும் என்ற வழமையான பாணியில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தமிழ் மக்களின் அரசியலை சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு முன்னகர்த்திச் செல்லலாம் என்பது குறித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை. அது மட்டுமல்லாமல், அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் எதிர்கால அரசியல் நகர்வு குறித்த விடயங்கள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர் விளக்கிக் கூறவில்லை. மொத்தத்தில் இரு தலைவர்களினதும் கருத்துக்கள் இந்தக் கருத்தாடலின் வெற்றிக்கோ அல்லது முன்னேற்றத்திற்கோ வழி சமைப்பதாக அமையவில்லை.
இருப்பினும் தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற கருத்தாடல் நிகழ்வானது தமிழ் அரசியலையும் அதன் செல்நெறி போக்கையும் பகிரங்கமாக சுய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அடித்தளம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. இது அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்வதன் மூலம் தமிழ் தரப்பு அரசியல் மந்த நிலைச் செயற்பாட்டிலிருந்து முன்னேற்றகரமான ஒரு நகர்வுக்கு இயங்கு பொறியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.




நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment