July 11, 2016

தமிழர்கள் இனவாதத்தை கைவிட வேண்டும்! - என்கிறார் சம்பிக்க !

நல்லிணக்கம் வேண்டுமாயின் ஐக்கிய இலங்கையை தமி்ழர்கள்“ ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கம்பஹா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 
உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் பயணத்தின் போது இனவாதத்தை கைவிட்டு ஒருமைப்பாட்டுக்காக ஒன்றிணைந்து கொள்ளுமாறு நான் தமிழ் கடும்போக்காளர்களிடம் கோருகின்றேன். கடும்போக்குடைய தமிழ் அரசியல்வாதிகள் புதிய அரசியல் அமைப்பில் சமஸ்டி முறை வேண்டுமெனக் கோரி நாட்டை பின்நோக்கி நகர்த்த முயற்சிக்கின்றனர்.

வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஏந்தி போராட்டம் நடத்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அல்ல. அவர்களுக்கு நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்ற இனவாத கொள்கையே காணப்பட்டது.

வடக்கும், தெற்கும் நல்லிணக்கப் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் மேலும் பயங்கரவாதிகள் செய்த காரியங்களை செய்ய வேண்டியதில்லை. முழு உலகமுமே பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படத் தொடங்கியுள்ளது. எனவே நாமும் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட வேண்டுமென சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment