கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இரண்டாவது நாளாக முன்னெடுத்துவந்த போராட்டத்தை இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் கைவிட்டுள்ளனர்.
போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குசென்ற கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை தீர்வு பெற்றுக்கொடுப்பதாக வழங்கிய வாக்குறுதியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிடில் இடைநிறுத்தப்பட்ட போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளார்.
இணைப்பு -01
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணிகளை விடுவிக்குமாறுகோரி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று சனிக் கிழமை தமது போராட்டத்தை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பாதுகாப்பு பணிகளில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமான பரவிப்பாஞ்சானில் 180 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது.
இவ்வாறு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் 54 குடும்பங்களுக்கான காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இவர்களில் 20 குடும்பங்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் தமது காணிகள் விடுவிக்கப்படாமையினால் தாங்கள் இன்றும் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாக பரவிப்பாஞ்சான் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது காணிகள் மீளவும் கிடைக்கும் வரை கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் எனவும் பரவிப்பாஞ்சான் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் அரசியல்வாதிகள் இராணுவம் மற்றும் உயரதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

No comments:
Post a Comment