July 11, 2016

கேப்டன் ராதிகாவுக்கு ஐ.நா வீரதீர விருது!

சூறாவளிக் காற்றுக்கிடையே கடலில் தத்தளித்த 7 மீனவர்களைக் காப்பாற்றிய கேப்டன் ராதிகா மேனனுக்கு ஐ.நா. சபையின் வீரதீர விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய பெண் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.


ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்பகுதியில் கடந்த ஜுன் 22ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகு சூறாவளிக் காற்று காரணமாக தண்ணீரில் மூழ்கியது. மீனவர்கள் கடலில் விழுந்து போராடிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வந்த கேப்டன் ராதிகாவின் கப்பல் வந்தது. மீனவர்கள் போராடுவதைப் பார்த்து உடனடியாக மீட்கும்படி தனது குழுவினருக்கு உத்தரவிட்டார். சூறாவளிக் காற்றை பொருட்படுத்தாமல் தத்தளித்த மீனவர்களை ராதிகா மேனன் தலைமையிலான மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

கடலில் வீரதீர செயல்களை புரிபவர்களுக்கு ஐ.நா. ஒத்துழைப்புடன் சர்வதேச கடல்சார் அமைப்பு வீரதீர விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு ராதிகாவின் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. தற்போது அந்த விருதுக்கு ராதிகா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் வரும் 21ம் தேதி இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெறம் முதல் இந்திய கடற்படை அதிகாரி ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது. வணிகக் கப்பல் ஒன்றுக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இந்திய பெண் ராதிகா ஆவார்.

No comments:

Post a Comment