July 5, 2016

சுவாதி கொலைக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: ஜாமீன் கோரிய ராம்குமார்!

சுவாதி கொலைக்கும், எனக்கும் எவ்விததொடர்பும் இல்லை எனக்கூறி ராம்குமார் ஜாமீன் கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுவாதி கொலைகுற்றவாளி ராம்குமாருக்கு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி,வரும் 18 ஆம் திகதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ராம்குமார் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எனக்கும் சுவாதி கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளான்.

உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றவே பொலிசார் தன் மீது குற்றம்சாட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும் பொலிசாருடன் வந்தவர்களே கழுத்தை அறுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றம் 2 நாட்கள் கெடு கொடுத்ததால் தான் பொலிசார் அவனை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது என ராம்குமாரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment