July 23, 2016

பாதுகாப்பை உறுதி படுத்துங்கள் பல்கலைக்கழகம் அனுப்புகின்றோம்! யாழ். பல்கலை மோதலின் எதிரரொலி: பெற்றோர்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கும் 800 சிங்கள மாணவர்களையும், அவர்களது பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்கும் வரையில், கல்வி நடவடிக்கைக்கு அனுப்பப்போவதில்லை என மாணவர்களினது பெற்றோர்கள் தெரிவித்துள்னர்.


யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் கொழும்பில் நேற்று மாலை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது பெற்றோர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 800 இற்கு மேற்பட்ட சிங்கள மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

எமது பிள்ளைகள் அங்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிப்பதற்குரிய பொறிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.

பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

எங்கள் பிள்ளைகள் தங்குவதற்கு வீடுகள் அல்லது மாணவர் விடுதிகள் நிர்வாகத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும்.

இது உடனடியாகச் செய்யப்படவேண்டும். யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, அங்கு கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களாகிய நாங்கள் சங்கடத்தை எதிர்கொண்டுள்ளோம்.

இந்நிலையில், பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உறுதியான, நம்பிக்கையான நடவடிக்கை எடுக்கும் வரையில், யாழ். பல்கலைக்கழகத்துக்கு எங்கள் பிள்ளைகளை அனுப்புவதில் விருப்பமில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment