July 6, 2016

கொழும்புக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழகத்தில் துறைமுகம்!

கொழும்புக்கு இணையாக தமிழகத்தில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


நேற்று கூடிய இந்திய மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியது. இதன்படி தமிழகம், கொலாச்சலில் இந்த துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.

இதன்மூலம் உலகத்தின் கிழக்கு – மேற்கு வர்த்தக பாதையின் ஊடாக சிறந்த வருமானத்தை ஈட்டமுடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த துறைமுகத்தை அமைக்க 27 ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முதற்கட்ட பணிகளுக்காக 6575 கோடி ரூபாய்களுக்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த துறைமுக கடல்பகுதி கொழும்புடன் ஒப்பிடுகையில் 2 மீற்றர் அதிக ஆழத்தை கொண்டிருக்கிறது. கொழும்பு 18 மீற்றர் ஆழத்தை கொண்டிருக்கும் நிலையில் கொலாச்சல் கடல்பகுதி 20 மீற்றர் ஆழத்தைக்கொண்டிருக்கிறது.

எனவே பாரிய கப்பல்களையும் இந்த துறைமுகத்துக்குள் உள்வாங்க முடியும்.

தென்னாசியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பொறுத்த வரையில் அதில் 66.6 வீத வர்த்தகத்தை கொழும்பின் துறைமுகம் கையாள்கிறது.

இதன் காரணமாக இந்திய துறைமுகங்களுக்கு வருடம் ஒன்றுக்கு 1500 கோடி ரூபாய்கள் வரை நட்டமேற்படுகின்றன என்ற விடயமும் இந்த புதிய துறைமுக அமைப்புக்கான ஏதுவாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment