June 19, 2016

இந்திய விமானப்படையில்பெண் விமானிகளுக்கு மோடி வாழ்த்து!

ஐதராபாத்தில் நேற்று நடந்த விழாவில் இந்திய விமானப்படையில் முதல்முறையாக போர் விமானிகளாக பாவனா காந்த், அவானி சதுர்வேதி,
மோகனா சிங் ஆகிய 3 பெண்கள் முறைப்படி பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அதில், ‘‘நமது விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பணிக்கான முதல் பிரிவில் 3 பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு இருப்பது மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்த செயல் அவர்களுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்

No comments:

Post a Comment