June 19, 2016

தமிழ் மக்கள் தமது நீதிக்காக தொடர்ந்து போராடவேண்டும்!

ஐக்கியநாடுகள் சபையினதும் சர்வதேச சமூகங்களினதும் செயற்பாடுகளினால் தமிழ்மக்கள் நம்பிக்கையிழந்துவருகின்றனர் என நிசோர் என அழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் காசிநாதர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

எனினும், சர்வதேச சமூகங்களின் இச்செயற்பாட்டில் நம்பிக்கையிழக்காமல் தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநாவின் 32ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் தலைவரான காசிநாதர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment