June 19, 2016

கொள்ளையடித்ததை நிரூபித்தால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்!- முன்னாள் ஜனாதிபதி!

அரசாங்கத்தின் உயர்மட்ட ஆட்சியாளர்கள் தான் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக சில சந்தர்ப்பங்களில் கூறியுள்ளதாகவும் தான் ஒரு டொலரையாவது திருடியதாக நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி  மேலும் எதிர்கால அரசியல் வாழ்க்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெற மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை தனக்கு எதிராக திசை திருப்பியதன் காரணமாகவே தான் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் போர் நிலைமையை குறைத்து மதிப்பிட்டிருந்தார் - மகிந்த

அடுத்த பொதுச் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சூசகம் வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் டைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த செவ்வியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்களையும் மகிந்த வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது தடுக்கப்பட்டாலும் அரசியலில் ஓய்வுபெற போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாடுகளை அபிவிருத்தி செய்த ஆசிய தலைவர்கள் குறித்து கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, சிங்கப்பூரின் லீ க்வான் யூ, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகதீர் மொஹமட் ஆகியோரே அந்த தலைவர்கள் எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பான நிலைமையை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறைத்து மதிப்பிட்டிருந்தார்.

சர்வதேச அழுத்தங்கள் மூலம் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பை பிரபாகரன் கொண்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறக் கூடாது என்பது தனது நோக்கம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment