நான்கு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏர் பிரான்ஸ் விமானிகள் நான்கு நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
நேற்று வெள்ளிக்கிழமை தொழில் அமைச்சர் Myriam El Khomri க்கும் CGT தொழிற்சங்க தலைவர் Philippe Martinezக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, தொடர் வேலை நிறுத்தத்தை பிரெஞ்சு அரசு சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அதை தொடர்ந்து விமானிகளில் தொடர் வேலை நிறுத்த திகதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளதாக AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 24ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை ஏர் பிரான்ஸ் விமானிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இடம்பெற்ற விமானிகள் வேலை நிறுத்தத்தில் 20 வீதமான விமான சேவைகள் முடக்கப்பட்டிருந்தனர். அதை தொடர்ந்து மீண்டும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் குறித்த மேலதிகள் தகவல்களை தொழிற்சங்கள் விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதைப்பந்தாட்ட போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது ஒரு அச்சுறுத்தல் நடவடிக்கை என ஜனாதிபதி பிரான்சுவா ஓலந்து முன்னர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment