June 20, 2016

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தமிழர்களுக்கு பாதமாகும் – சுரேன் சுரேந்திரன்!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தமிழர்களுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என க்ளோபல் தமிழ் போராத்தின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.


க்ளோல் தமிழ் போராம் அமைப்பு இலங்கையர்களைக் கொண்ட அமைப்பு எனவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிளவடைவது தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா வெளியேறுவதனால் ஏற்படக் கூடிய சாதக பாதகத் தன்மைகளை கருத்திற் கொண்டு தனிப்பட்ட ரீதியில் அவர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டுமென அவர்தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க வேண்டியது ஜனநாயக உரிமை எனவும் அதனை அனைவரும் பயன்படுத்த வேண்டுமென கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், 28 நாடுகளைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பது தமிழ் மக்களுக்கு நன்மை தரும் என்பதே தமது தனிப்பட்ட ரீதியான நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment