June 19, 2016

உள்ளாட்சி தேர்தலுக்கான பல திட்டங்களுடன் கருணாநிதி வசம் !

நடக்கவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் கருணாநிதி தன் கைவசம் வைத்துள்ளார்.

•உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை, இப்போதே தேர்ந்தெடுத்து, அவர்களை, சம்பந்தப்பட்ட பகுதிகளில், தேர்தல் வேலை செய்யச் சொல்ல வேண்டும்.
•உள்ளாட்சி பொறுப்புகளுக்காக, கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அந்த பகுதியின் பிரதான ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
•ஏற்கனவே உள்ளாட்சி பொறுப்புகளில் இருந்து புகார்களுக்கு ஆளாகாத மக்கள் செல்வாக்கு பெற்ற பிரமுகராக இருக்க வேண்டும்.
•தேர்தல் வேலையில் ஆர்வமுள்ள கட்சி மீது பிடிப்புள்ள மாவட்ட செயலர்களை தமிழகம் முழுவதும் நியமித்து விட வேண்டும்.
•பெரும்பாலான இடங்களில், மாவட்ட செயலர் பரிந்துரைக்கும் நபர்களையே உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும்.
•தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து, கொங்கு மண்டலத்துக்கு கனிமொழி, தென் மண்டலத்துக்கு ஐ.பெரியசாமி, டெல்டா பகுதிக்கு டி.ஆர்.பாலு, வட மண்டலத்துக்கு துரை முருகன் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து, தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
•உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி, கட்சி தனித்து போட்டியிடு வதா, கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து விவாதித்து, அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment