ஹம்பாந்தோட்டை – முல்கிரிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தொடர்பு கிடையாது என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தண்டனைப் பெற்ற சிறைக்கைதியாக நானும் ஒரு வருடமும் 4 மாதங்களும் சிறைவாசம் அனுபவித்தவன். சிறைச்சாலையில் மருத்துவமனையும் இருக்கவில்லை.
எனினும் தேர்தல் காலத்தில் இரண்டு மாதங்களுக்கு வைத்தியசாலையில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பொய் ஒன்றைக் கூறிவிட்டே சென்றேன். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விசேட அறை ஒன்றில் தங்கியிருந்தேன்.
பிரதம நீதியரசராக இருந்த சரத் நன்தசில்வா என்ற கீழ்த்தரமான ஒருவரால் வழங்கப்பட்ட பிழையான தீர்ப்பினிமித்தம் இப்படி செய்தேன்.
சரத் என். சில்வா ஒன்று இரண்டு அல்ல, விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் பழியான தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார். அதனை அவரது வாயினாலேயே ஏற்றுக்கொண்டிருக்கிறார். சுமார் 10 ஆயிரம் பிழையான தீர்ப்புக்களை அவர் வழங்கியிருக்கிறார்.
முல்கிரிகல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியவரும் இன்று உயிருடன் இல்லை. பிரயோகத்தை நடத்தியவரையும் நான் அறிவேன்.
ஆனால் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் விசேட ஆலோசனைப் பேரில் அன்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் மஹிந்த ராஜபக்சவே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சாட்சியளித்திருந்தார். முறைப்பாட்டையும் வழங்கியிருந்தார்.
இதனடிப்படையில் மஹிந்த கைது செய்யப்பட்டு ஒரு வருடமும் மூன்று மாதங்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, அவரது தாயாரது மரணச் சடங்கிலும் காவலுக்கு இடையில் கலந்துகொண்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் இரத்த அழுத்தம் காரணமாக அதிகளவான நாட்களை வைத்தியசாலையிலேயே கழித்திருந்தார்.
ஆகையால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்ற எந்தவொரு கைதியும் எப்படிப்பட்ட குற்றச்செயலை செய்திருந்தாலும் அவரை நோயற்ற மனிதனாக வெளியேற வைப்பது நமது பொறுப்பாகும் – என்றார்.

No comments:
Post a Comment