May 30, 2016

ஜெயலலிதாவுக்காக வட மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டது!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சியினர் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் பொது செயலாளர் ஜே.ஜெயலலிதாக முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.


ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்றதற்கு, பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொண்டு வந்தார்.

எனினும், இதற்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து குறித்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் வெள்ளம் மற்றும் மண் சரிவு போன்ற அனர்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன.

இந்நிலையில், வெள்ள நிலைமை குறித்துத்தான் முதலில் சபையில் விவாதிக்கவேண்டும் என வட மாகாண சபையின் துணைத்தலைவர் எண்டன் ஜெகநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த தீர்மானத்திற்கு ஆளும் கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த, வட மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜயதிலக, நாட்டில் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில் இதுபோன்று வெளிநாட்டு தலைவர்களுக்கு பாராட்டு தீர்மானம் கொண்டு வருவது பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த தீர்மானம் கைவிடப்பட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment