May 30, 2016

வலிகளை சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் தமிழ் படைப்பாளி உருவாக வேண்டும்- நடிகர் நாசர்!

கடந்த கால சம்பவங்களில் வடக்கு மக்கள் அதிக வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில்,
தென்னிந்தியாவைத் தவிர ஒரு சிறந்த படைப்பாளி தமிழ் பேசும் சமூகத்திலிருந்து உருவாக வேண்டுமாயின், அவர் ஈழத்திலிருந்தே உருவாக வேண்டுமென தென்னிந்திய திரைப்பட நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார்.

காரணம் ஒரு சிறந்த படைப்பிற்கு வலி என்பது மிகவும் முக்கியமானதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

தமிழர்களது கலையை உலகிற்கு எடுத்துச் செல்வதை காரணமாக கொண்டே தமது இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், ஈழத்தின் கலைகள் ஒரு நாள் உலக அரங்கிற்குச் செல்லுமென நம்பிக்கை தெரிவித்தார்.

தாம் வடக்கின் மண்ணில் கால் பதித்தபோது, அங்கு வீசிய காற்று தனது தன்மையை விட்டு விலகி தோல்களை கனத்து வீசியதாக குறிப்பிட்ட நாசர், அதற்கான காரணத்தை உணர்ந்துகொண்டதாகவும், வடக்கின் மண் பல கனவுகளுக்காகவும் பல உரிமைகளுக்காகவும் காத்து நிற்கின்றதெனவும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment